Asianet News TamilAsianet News Tamil

அதிமுகவின் தேர்தல் அறிக்கை,எடப்பாடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக், இனி வெற்றி மட்டும் தான் பாக்கி..!

அம்மா  இல்லம், குள விளக்கு திட்டம், வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள், விவசாயிகளுக்கு உளவு மானியம் என அதிரடியான வாக்குறுதிகளை சென்னை ராயப்பேட்டையில் வெளியிட்டுள்ளார்.

Manifesto Special announcement defiantly Given mass success to ADMK
Author
Chennai, First Published Mar 15, 2021, 10:59 AM IST

அதிமுகவின் தேர்தல் அறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை வெளியிட்டார். அம்மா  இல்லம், குள விளக்கு திட்டம், வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள், விவசாயிகளுக்கு உளவு மானியம் என அதிரடியான வாக்குறுதிகளை சென்னை ராயப்பேட்டையில் வெளியிட்டுள்ளார்.

Manifesto Special announcement defiantly Given mass success to ADMK

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அனைத்து திட்டங்களும் ஏழை, எளிய மக்களுக்காக உருவாக்கப்பட்டது என முதலமைச்சர் தெரிவித்தார். மக்களின் அடிப்படை வசதிகளையும், அவர்கள் வாழ்வாதரம் முன்னேறுவதற்கும் ஏற்ற படி அனைத்து திட்டங்களும் இந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. ஏழை, எளியோர், விவசாய பெருமக்கள், மகளிர் சுயஉதவி குழுக்கள், பள்ளி மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் அதிமுக அரசு வெளியிட்ட தேர்தல் அறிக்கை கவர்ந்துள்ளது என்று தான் கூற வேண்டும். எல்லோருடைய தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது. 

ஏழை எளிய மக்களை நேரடியாக சென்றடையும் திட்டங்கள் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சங்கள்,  

*அனைவருக்கும் வீடு- அம்மா இல்லம் திட்டம்.

கிராமப்புறங்களில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் எனவும், நகர்ப்புறங்களில் வீடு இல்லாத மக்களுக்கு அரசே நிலம் வாங்கி அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கப்படும்.

*குளவிளக்கு திட்டம் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் 1,500 ரூபாய் குடும்பத் தலைவிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்கில்  செலுத்தப்படும் என்றும், பெண்கள் இல்லாத வீடுகளில் ஆண்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

*பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு, இனி ஆண்டுதோறும் தவறாமல் வழங்கப்படும்.

*நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கு, 50% கட்டண சலுகை வழங்கப்படும்.

*வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள். 

*அனைத்து குடும்பத்திற்கும், வருடத்திற்கு 6 இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவித்தார்.

*அம்மா சோலார் சமையல் அடுப்பு மற்றும் அம்மா வாசிங் மெஷின் இலவசமாக வழங்கப்படும்.

*விவசாய உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 7,500 ரூபாய் உழவு மானியம் வழங்கப்படும்.

*மாணாக்கர் நலன் காக்க மாணவர்களின் கல்விக்கடனையும் ரத்து செய்யப்படும்.

*நாளொன்றுக்கு வழங்கப்படும் 2GB இலவச டேட்டா, இனி ஆண்டு முழுவதும் இலவசமாக வழங்கப்படும்.

*வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை உறுதியாக வழங்கப்படும் என அறிவித்தார்.

*சமூக ஓய்வூதிய திட்டம் சமூக பாதுகாப்பிற்காக வழங்கப்படும் 1,000 ரூபாய் உதவித்தொகை, இருமடங்காக உயர்த்தி 2,000 ரூபாயாக வழங்கப்படும்.

*ஏழை தம்பதிகளுக்கு பட்டாடை, வெள்ளிக்கொலுசு, வீட்டு உபயோகப் பொருட்கள் போன்ற சீர்வரிசைகள் வழங்கப்படும்.

*இலவசமாக அரசு கேபிள் டிவி இணைப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.

*சிறுதானியங்களுக்கு குறைந்தப்பட்ச ஆதார விலை MSP  தமிழக அரசால் வழங்கப்படும்.

*9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். துவங்கிய சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படும்.

*தனியார் பங்களிப்புடன் நடத்தப்படும் தொடக்கப்பள்ளிகளில்  குழந்தைகளுக்கு, காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

*அனைத்து மாணாக்கர்களுக்கும் தினமும் 200 மி.லி. பால் அல்லது பால் பவுடர் வழங்கப்படும் என அறிவித்தார்.

*தனியாரிடம் கடன் வாங்கி சிரமப்படுவதை தவிர்க்க, வட்டியில்லா கடனுதவி - அம்மா பேங்கிங் கார்டு  மூலம் வழங்கப்படும்.

இவ்வாறு அனைத்து எளிய மக்களின் அத்தியாவசிய தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் அதிமுக அரசு வெளியிட்ட தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது. எல்லா வாக்குறுதிகளும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வாழ்க்கை முறையை முன்னேற்றும் படியான வாக்குறுதிகளாக அமைந்தது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வெளிவந்த சில மணி நேரங்களிலே அனைவரும் சமூக வலை தளங்களில் பாசிட்டிவான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மதரீதியாகவோ அல்லது சாதி ரீதியாகவோ எந்தவொரு வாக்குறுதியும் அமையப்பெறாமல் எல்லா அறிக்கையும் பொதுவான முறையில் வேற்றுமை இல்லாத வாக்குறுதிகளாக அமைந்தது.

ஏற்கனவே தேர்தலுக்கு முன்பே அறிவித்த விவசாய பயிர் கடன்கள், நகை கடன்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்வதாக அவரளித்த வாக்குறுதிகளையும் கடந்த நாட்களில் நிறைவேற்றியும் முடித்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சொன்னதை செய்து காட்டியதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைத்து சொன்னதை செய்து காட்டுவர் என பெருவாரியான மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios