மக்களவைத்  தேர்தலையொட்டி  நாட்டில் உள்ள ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் சின்னம் மற்றும் தொகுதி அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் என பட்டியல் தயாரித்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற கட்சிகள் என்றால் அதற்கு தேர்தல் ஆணையம்  ஒரு முறை ஒதுக்கும் சின்னம்தான் அந்தகட்சி தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுகவுக்கு உதயசூரியன் சின்னமும், அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னமும் காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய கட்சிகளான காங்கிரசுக்கு கை சின்னமும், பாஜகவுக்கு தாமரைச் சின்னமும்  பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் பாமக மாம்பழச்சின்னத்தையும், தேமுதிக முரசு சின்னத்தையும், விசிக மோதிரம் சின்னத்தையும், நாம் தமிழர் கட்சி இரட்டை மெழுகுவர்த்தி சின்னமும் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த கட்சிகள் எல்லாம் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறாக கட்சிகள் என்பதால் சின்னங்கள் மாற்றப்பட வாய்ப்பு இருந்தது. 

அதன்படி விசிக வுக்கு பானை சின்னமும், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னமும் ஒதுக்கப்பட்டது. புதிய கட்சியான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னமும் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு  மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இன்று உறுதி செய்துள்ளது.