Asianet News TamilAsianet News Tamil

பற்றி எரியும் தீயை அமித்ஷா அணைக்கணும் !! பத்த வைக்கக் கூடாது !! கடும் எச்சரிக்கை விடுத்த மம்தா பானர்ஜி !!

குடியுரிமை திருத்த சட்டத்தால், நாடு முழுக்க பற்றி எரியும் தீயை அமித் ஷா அணைக்க வேண்டும் என்றும் என்றும் அதை அவர் பற்ற வைக்ககூடாது என்றும் மேற்கு வங்க முதலமைச்சர்  மம்தா பானர்ஜி  எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

Mamtha Banerji oppose amithsha
Author
Kolkata, First Published Dec 19, 2019, 7:48 AM IST

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்த மசோதா, ஜனாதிபதி ஒப்புதலை பெற்று சட்டம் ஆகியுள்ளது. இருப்பினும், அதற்கு வடகிழக்கு மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகள், நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

மேற்கு வங்காள மாநில டுதலமைச்சரும் , திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, குடியுரிமை திருத்த சட்டத்தை மேற்கு வங்காளத்தில் அமல்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்று கூறி வருகிறார். அந்த சட்டத்துக்கு எதிராக அவர் ஏற்கனவே 2 நாட்கள் கண்டன பேரணி நடத்தினார்.

Mamtha Banerji oppose amithsha

தொடர்ந்து 3-வது நாளாக,  அவர் தனது கட்சியினருடன் சேர்ந்து பேரணி நடத்தினார். ஹவுரா மைதானத்தில் இருந்து கொல்கத்தாவின் மையப்பகுதியான எஸ்பிளனேடுவரை பேரணி நடைபெற்றது.

இதில் பேசிய மம்தா, தேசிய குடிமக்கள் பதிவேட்டையும், குடியுரிமை திருத்த சட்டத்தையும் மேற்கு வங்காளத்தில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். யாரையும் மாநிலத்தை விட்டு போக சொல்ல முடியாது.

Mamtha Banerji oppose amithsha

மதம், சாதி, இன பாகுபாடின்றி அனைவரும் சேர்ந்து வாழ்வதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். நாம் அனைவரும் இந்நாட்டின் குடிமக்கள். யாரையும் எங்களிடம் இருந்து பிரிக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

குடியுரிமை திருத்த சட்டத்தால், நாடே பற்றி எரிகிறது. தீ மேலும் பரவாமல், அதை அணைக்க வேண்டிய பொறுப்பு, அமித் ஷாவுக்கு இருக்கிறது. அவரது வேலை, தீ வைப்பது அல்ல, தீயை அணைப்பது தான். அவர் நாட்டை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். பா.ஜனதாவினரை அடக்கி வைக்க வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios