பாஜகவிடம் இருந்து மாநிலங்களை காக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்களுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், ’’டெல்லி மாநில முதலமைச்சரை விட ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இன்று டெல்லி அரசின் அதிகாரத்தை பறித்துள்ள பாஜக, நாளை மற்ற மாநிலங்களின் அதிகாரத்தையும் பறிக்கும். 
 
பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மத்திய அரசு பிரச்சினைகளை உருவாக்குகிறது. மேற்கு வங்கம் உள்ளிட்ட அனைத்து மாநில ஆளுநர்களும் பாஜகவின் தொண்டர்கள் போல் செயல்படுகிறது. பாஜக அரசால் கூட்டாட்சி தத்துவம் சிதைக்கப்படுவதை தடுக்க வேண்டும்’’ எனவும் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.