மேற்கு வங்காளத்தில் சட்டமன்றத் தேர்தல் அடுத்தாண்டு மே மாதத்தில் நடைபெற இருக்கிறது. 2019ல் நடந்த பாராளுமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க 18 இடங்களில் வெற்றி பெற்று, ஆளும் திரிணாமுல் காங்கிரஸிற்கும் மம்தா பானர்ஜிக்கும் கடும் போட்டியையும், நெருக்கடி கொடுத்தது. அதன் பிறகு மம்தா கடுப்பாகி போய்இருக்கிறார். எங்கே சட்டசபை தேர்தலிலும் இது போன்ற ரிசல்ட் அமைந்து விடுமோ என்கிற அச்சம் மம்தாவை தொற்றிக்கொண்டிருக்கிறது.

40 ஆண்டுகாலமாக ஆட்சி செய்து வந்த கம்யூனிஸ்டுகளை, மூன்றாம் இடத்திற்கு தள்ளி தற்போது திரிணாமுல் காங்கிரஸா பா.ஜ.கவா என்ற நிலைமை அங்கே ஏற்பட்டுள்ளது. இது மம்தா பானர்ஜிக்கு கடும் பீதியை உருவாக்கியுள்ளது எனக் கூறப்படுகிறது.அவரது அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் நடக்கும் சந்திப்புகளில் கோபமுடன் சீறுவது, அவமதிப்பது ,கடுமையான கண்டனங்களை எழுப்புவது என மோசமான பாணியில் மம்தா பானர்ஜீ  நடந்து கொள்வது ரகசியமான ஒரு விஷயம் அல்ல. முதலமைச்சர் ஏதாவது ஒரு அமைச்சரை ஏதாவது ஒரு காரணத்திற்காக அவமதிப்பும் கண்டிப்பதும் செய்யாமல் எந்த  அமைச்சரவைக்  கூட்டங்களும் கடந்து சென்றதில்லை என்றும் கூறப்படுகிறது.
பீகார் தேர்தல் போன்று வந்து விடுமோ என்று தேர்தல் நடக்க இருக்கும் மாநிலங்களில் அங்குள்ள மாநில கட்சிகள் எல்லாம் பாஜகவின் பயத்தில் இருக்கிறார்கள்.