Asianet News TamilAsianet News Tamil

மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய மம்தா பானர்ஜிக்கு ஒரு நாள் தடை... தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு.!

சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 24 மணி நேரம்  தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்தது.
 

Mamata Banerjee banned from campaigning in West Bengal for one day... Election Commission orders!
Author
Kolkata, First Published Apr 12, 2021, 9:36 PM IST

Mamata Banerjee banned from campaigning in West Bengal for one day... Election Commission orders!

மேற்கு வங்காளத்தில் 294 தொகுதிகளுக்கு 6 கட்டங்களாக நடைபெறுகிறது. 4 கட்டத் தேர்தல் முடிந்தவிட்ட நிலையில்,  எஞ்சிய கட்டத் தேர்தல்கள் ஏப்ரல் 17, 22, 26, 29 ஆகிய தேதிகளில் நடைபெறா உள்ளன. தற்போது ஐந்தாம் கட்டம் தேர்தல் நடத்தும் பகுதிகளில் அரசியல் கட்சிகளின் தீவிர பிரசாரம் நடைபெற்றுவருகின்றன. இத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. என்றாலும் திரிணாமூல் காங்கிரஸ் - பாஜக இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. Mamata Banerjee banned from campaigning in West Bengal for one day... Election Commission orders!
எனவே, இந்தக் கட்சித் தலைவர்களின் அனல் பறக்கு பிரசாரங்களால் மேற்கு வங்களத்தில் சூடுபறக்கிறது. திரிணாமூல் காங்கிரஸ் - பாஜக தலைவர்கள் தலைவர்கள் தெரிவிக்கும் பல கருத்துகள் சர்ச்சைக்குரியதாக இருப்பதால், தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சில  தினங்களுக்கு முன்பு மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பிரசாரக் கூட்டத்தில் பேசும்போது, “முஸ்லீம்கள் வேறு கட்சிகளுக்கு வாக்களித்து ஓட்டை பிரிக்காமல், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும்” என்று பேசியதாக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்தது.Mamata Banerjee banned from campaigning in West Bengal for one day... Election Commission orders!
 இந்தப் பேச்சு தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்தப் பேச்சுக்கு மம்தா பானர்ஜி இன்று விளக்கம் அளித்தார். ஆனால், மம்தா பானர்ஜி அளித்த விளக்கம் ஏற்கும்படி இல்லை என்று தெரிவித்த தேர்தல் ஆணையம், மம்தா பானர்ஜி 24 மணி நேரம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதித்தது. இதன்படி இன்று (12-4-21) இரவு 8 மணி முதல் நாளை (13-04-21) இரவு 8 மணி வரை மம்தா தேர்தல் பிரசாரம் செய்ய முடியாது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவால் மேற்கு வங்காளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios