Asianet News TamilAsianet News Tamil

தி.மு.க கூட்டணியில் மக்கள் நீதி மய்யம்... 25 சீட்டுகள் ஒதுக்கிய மு.க.ஸ்டாலின்..?

 தி.மு.க - மக்கள் நீதி மய்யம் கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மக்கள் நீதி மய்யத்திற்கு 25 இடங்களை தி.மு.க ஒதுக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 
 

Makkal neethi mayyam in DMK alliance ... MK Stalin allotted 25 seats
Author
Tamil Nadu, First Published Feb 1, 2021, 12:28 PM IST

தி.மு.க - மக்கள் நீதி மய்யம் கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மக்கள் நீதி மய்யத்திற்கு 25 இடங்களை தி.மு.க ஒதுக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

ஏற்கெனவே திமுகவுடன் கூட்டணி சேர கமல்ஹாசன் உதயநிதியை ரகசியமாக சந்தித்து பேசியதாக கூறப்பட்டது. ஆனால் அதனை கமல் ஹாசன் மறுத்து வந்த நிலையில், இப்போது கூட்டணி உறுதியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.Makkal neethi mayyam in DMK alliance ... MK Stalin allotted 25 seats

தி.மு.க கூட்டணியில் ஏற்கனவே அதிக கட்சிகள் இருப்பதாகவும், தி.மு.க வலுவாக இல்லாத காரணத்தால் கூட்டணிக்கு கட்சிகளை தி.மு.க சேர்த்து வருவதாகவும் அதே சமயம் அ.தி.மு.க வலுவான நிலையில் இருப்பதான ஒரு உணர்வை மக்கள் நீதி மய்யத்தின் வருகை காட்டுவதாக தி.மு.கவின் மூத்த தலைவர்கள் வருத்தமடைந்துள்ளனர். கமல் கட்சிக்கு 25 இடங்கள் என்பது மிகவும் அதிகம் என்பதால் தி.மு.க கூட்டணி கட்சிகள் கோபடைந்துள்ளன. 4 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்து வரும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், புதிய கட்சியான மக்கள் நீதி மய்யத்திற்கு தி.மு.க அதிக இடங்களை கொடுப்பதாக கோபமடைந்துள்ளன.  Makkal neethi mayyam in DMK alliance ... MK Stalin allotted 25 seats

6.5% வாக்கு வங்கியை கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி 40 இடங்களை கேட்க முடிவு செய்துள்ளது. தி.மு.க.,  காங்கிரஸ் கட்சியை மக்கள் நீதி மய்யத்துக்கு இணையாக கருதக் கூடாது, ஆகவே காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை பெற வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இதனால், தி.மு.க கூட்டணியில் மிகப் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கமலின் வருகையால் ஸ்டாலின் முற்றிலுமாக ஒரங்கட்டப்படுவார் என்று தி.மு.கவின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். Makkal neethi mayyam in DMK alliance ... MK Stalin allotted 25 seats

தி.மு.க கூட்டணி கட்சிகள் மக்கள் நீதி மய்யத்தின் பிரச்சாரமான தமிழ்நாட்டிற்கு மாற்றம் தேவை என்பதை ஏற்க மறுக்கின்றனர். இதனால், மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்த நிர்வாகிகள் வருத்தமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.  

Follow Us:
Download App:
  • android
  • ios