கவிஞர் சினேகன், நடிகர்கள் வையாபுரி, பரணி , ஸ்ரீபிரியா, விஜய் டிவி மகேந்திரன் என ஒட்டுமொத்த டீமும் இருக்கிறதே இது மக்கள் நீதி மய்யம் கட்சியா அல்லது பிக் பாஸ் குடும்பமா ? என நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டல் அடித்துள்ளார்.

நடிகர் கமலஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார். மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கமல் இதனை அறிவித்தார்.

அனைவருக்கும் தரமான கல்வி, மருத்துவம்,  குடிநீர், மின்சாரம் போன்றவை கிடைக்க மக்கள் நீதி மய்யம் கட்சி பாடுபடும் என தெரிவித்த கமல், இலவசங்கள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என கூறினார்.

முன்னதாக ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாமின் இல்லத்துக்குச் சென்ற கமலஹாசன், அவரின் சகோதரர் முத்து மீரான் மரைக்காரயரிடம் ஆசி பெற்றார். கலாம்  குடும்பத்தினர் கமல் அரசியலில் வெற்றிபெற சிறப்புத் தொழுகை செய்தனர்.

கமல் தொடங்கியுள்ள இந்த கட்சியில் ஒட்டுமொத்த பிக் பாஸ் டீமே இறங்கியிருப்பதாக நடிகை கஸ்தூரி கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்

சிநேகன், வையாபுரி, பரணி, ஸ்ரீபிரியா, விஜய் டிவி மகேந்திரன். என . மொத்த பிக் பாஸ் டீம் இறங்கியிருக்கு. விவோதான் ஸ்பான்ஸரா?  என்றும் எலிமினேஷன் கூட வரும்ல'' என்றும்  கிண்டல் செய்துள்ளார்.