காங்கிரஸ் கட்சியுடன் மக்கள் நீதி மய்யம் இணைப்பா? உண்மை என்ன? வெளியான தகவல்..!
ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.

வரும் 30ம் தேதி ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இறுதியில் இது ஹேக்கர்களின் கைவரிசை என்பது தெரியவந்தது.
கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து, ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.
இந்நிலையில், நேற்று மாலை மக்கள் நீதி மய்யம் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் வரும் 30ம் தேதி ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதில், அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இந்த செய்தி குறித்து சில ஊடங்களிலும், சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சமூக வலைத்தள பக்கம் ஹேக் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கள் கட்சியின் வலைத்தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர். இந்த தகவல் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் மறுக்கப்பட்டுள்ளதுடன் இதுகுறித்து விளக்கமும் அளிக்கப்பட்டது.
அதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ வலைதளம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர். மேலும், ஜனநாயக சக்திகளை ஒடுக்கியே பழக்கப்பட்ட ஈனர்களின் இழிசெயல்களுக்கு அஞ்சாமல் தக்க பதிலடி கொடுப்போம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.