மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் மத்திய அமைச்சர் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் அதிரடியாக தமிழகம் முழுவதும் தன்னுடைய சூறாவளி சுற்றுப் பயணத்தை தொடங்கி பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். கமல்ஹாசன் தென்மாவட்டங்களில் முதற்கட்ட பிரசாரத்தை முடித்துவிட்டு 2ம் கட்ட பிரச்சாரத்தை வட மாவட்டங்களில் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளரான அருணாச்சலம் இன்று பாஜகவில் இணைகிறார். தமிழகம் வந்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பாஜகவில் அருணாச்சலம் இணைய உள்ளார். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கியது முதலே அக்கட்சியில் பொறுப்பு வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.