கடந்த 5ம் தேதி முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையொட்டி சட்டமன்ற அதிமுக தலைவராக சசிகலாவை முன்மொழிந்தார். மேலும், சசிகலாவை முதலமைச்சராக பதவியேற்க வேண்டும் என அனைத்து எம்எல்ஏக்களும் ஏகமனதோடு தீர்மானம் நிறைவேற்றினர்.
இதை தொடர்ந்து 7ம் தேதி சசிகலா பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது. பதவியேற்பு விழா, பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன.
இதற்கிடையில், முதல்வர் ஒ.பி.எஸ். தனது ராஜினாமா கடித்ததை, தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவிடம் ஒப்படைத்தார். ஆனால் கவர்னர், புதிய முதலமைச்சர் பதவியேற்கும் வரை, அவரையே முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும்படி கூறினார்.
பதவியேற்பு விழா கோலாகலமாக நடக்க இருந்த வேளையில், கவர்னர், கோவையில் நடந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்தார். ஊட்டியில் உள்ள தமிழகம் இல்லத்தில் குடும்பத்துடன் தங்கினார். அந்த நேரத்தில், அதிமுக பொது செயலாளர் சசிகலா முதலமைச்சராக பொறுப்பேற்பதற்கு அதிமுக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்றார். அங்கு சுமார் ஒரு மணி நேரம் தியானத்தில் இருந்த அவர், சசிகலா மீது சரமாரியாக புகார் செய்தார். இச்சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அதிமுகவில் நடக்கும் பிரச்சனைகள், எனக்கு பெரும் மன அழுத்தத்தை கொடுத்து கொண்டே இருந்த்து. இதனால், முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில், சுமார் ஒரு மணிநேரம் செய்தேன்.
நான் கட்சியிலும், எனக்கு கொடுத்த பொறுப்பிலும் கட்டுப்பாட்டுடனும், கவனமுடனும், பொறுப்புடனும் இருந்து வந்தேன். கட்சிக்கும், ஆட்சிக்கும் கடுகளவும் பங்கம் ஏற்பட கூடாது என்பதற்காக பொறுமையுடன், எதையும் வெளியே சொல்லாமல் மனதுக்குள்ளேயே குமுறிக்கொண்டு இருந்தேன்.
கடந்த 5ம் தேதி நடந்த எம்எல்ஏக்கள் கூட்டம் பற்றி எனக்கு எந்த்த தகவலும் யாரும் தெரிவிக்கவிலைல. கட்சி அலுவலகத்தில் எம்எல்ஏக்களிடம் கையெழுத்து வாங்குவதாக மட்டும் கூறினார்கள். என்னை அவமதிப்பதாக பல செயல்களை செய்தார்கள். அதை எடுத்து கூறினேன்.
அதற்கு யாரும் பதில் கூறவில்லை. அந்த நிலையில் கூட கட்சியின் கண்ணியத்தை காப்பாற்றுங்கள், நான் வீட்டுக்கு சென்று, எனது தாயை பார்த்துவிட்டு வருகிறேன் என கூறி சென்றுவிட்டேன். நான் முதலமைச்சராக இருக்கும்போதே கடுமையாக அவமானப்படுத்தப் பட்டேன்.
என்னிடம் கட்டாயப்படுத்தி, ராஜினாமா கடிதத்தை, கையெழுத்திட்டு வாங்கினார்கள். நான் இக்கட்டான சூழலுக்கு ஆளாக்கப்பட்டேன்.
இதுபோல், கட்சியில் உள்ள பிரச்சனைகளில் 10 சதவீதம் மட்டுமே இப்போது கூறி இருக்கிறேன். எனக்கு அதிகளவில் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால், செய்தியாளர்களிடம் கூறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
நான் முதல்வராக இருக்கும் போது சில அமைச்சர்கள், சசிகலாவை முதல்வராக வேண்டும் என கூறினர். அது என் மனதை மிகவும் பாதிக்க செய்தது. சக அமைச்சர்களே முதல்வராக இருந்த என்னை அவமானங்ப்படுத்தினர். இதுபோன்ற சூழல் ஜெயலலிதா இருந்தால, நடந்து இருக்குமா..?
எனக்கு உள்ள நற்பெயரை கட்சியின் தலைமை விரும்பவில்லை. ஆனாலும், அமைச்சர்கள் மீது அதிருப்தி காட்டாமல் பணியை மட்டும் செய்தேன். நான் சந்தித்த அவமானங்கள் அதிகம். வேதனையுடன் 60 நாட்களை கழித்தேன். அதற்கு பரிகாரம் தேடுவதற்காகவே ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்றேன்.
என் விசுவாசத்தை பார்த்து தான், நான் கேட்காமலே எனக்கு பதவியை கொடுத்தவர் ஜெயலலிதா. அவர் கொடுத்த பதவிக்கு கெட்ட பெயர் வராமல் நான் பாதுகாத்து வந்தேன்.
ஒரு பத்திரிகையாளர் விழாவின் போது எனக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தியது. குத்துவிளக்கு ஏற்றி பேசிய சசிகலா, நான் பேசுவதற்கு முன் புறப்பட்டு சென்றுவிட்டார். அப்போது, என் நிலையை நினைத்து வேதனையடைந்தேன். இதுபோன்று நான் முதல்வர் பதவியில் இருந்தபோதே அவமானப்படுத்தப்பட்ட செயல்கள் அதிகம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
