அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை பொது மக்கள் யாருக்கும் பிடிக்காமல் போனது. இதனால் அவர் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனதை அவர்கள் விரும்பவில்லை. ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போது அவரை பார்க்க விடாமல் செய்ததது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து தகவல் ஏதும் தெரிவிக்காமல் இருந்தது என சசிகலா மீது அடிமட்டத் தொண்டர்கள் பெரும் கோபத்தில் இருந்தனர்.
இந்நிலையில் பொது மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஜெயிலுக்கு போவதற்கு முன் சசிகலாவை எடப்பாடி பழனிசாமியை, முதலமைச்சராக தேர்ந்தெடுத்தார்.

தமிழகம் முழுவதும் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகியுள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில், எடப்பாடி பழனிசாமி ஆட்சியை மக்கள் முற்றிலும் புறக்கணிக்கின்றனர் என்றும் அவர் ஆட்சியை அகற்றி தமிழகத்தை காக்க வேண்டும் என ஆளுநருக்கு இ – மெயில்கள் குவிந்து வருகின்றன.
அதேநேரத்தில் சட்டசபையில் தங்கள் கோரிக்கை மறுக்கப்பட்டு, சபாநாயகர் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதாக, கவர்னர் வித்யாசாகர் ராவிடம், தி.மு.க.,வினரும் மனு அளித்தனர்.

இந்நிலையில் ஆளுநரின் ராஜ்பவன், இ - மெயில் முகவரிக்கு, தமிழக மக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம்' என, முகவரியுடன் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் நேற்று, கவர்னரின் இ - மெயில் முகவரிக்கு தங்களுக்கு கருத்தை தெரிவித்தனர்.
இதில், 'முற்றிலும் விரோதமான, விரும்பத்தகாத ஆட்சி அமைந்துள்ளது. இவர்களை நாங்கள் ஒருபோதும் ஏற்கவில்லை. தற்போது தமிழகத்தை நீங்கள் மட்டும் தான் காக்க முடியும்.
தமிழக மக்களின் கருத்தை கேட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுஉள்ளது. இதேபோல், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களிலும், பொதுமக்கள் தங்கள் கருத்தை வெளியிட்டு வருகின்றனர்.
