மகாராஷ்ட்ராவில் சிவசேனாவுடன்  கூட்டணி அமைப்பதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் முதலமைச்சர்  பதவி யாருக்கு என்பதில் ஏற்பட்ட மோதலால் பா.ஜ., - சிவசேனா கூட்டணி முறிந்தது. இதனால் கவர்னர் அழைத்தும் பெரும்பான்மை இல்லாததால் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங் - காங்., கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதனால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதன் பிறகு காங்கிரஸ்., - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியுடன் பேசி, ஆட்சி அமைக்க சிவசேனா தயாராகி வருகிறது. இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் சிவசேனா தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா ஒப்புதல் வழங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை சந்தித்த போது, கூட்டணிக்கான ஒப்புதலை சோனியா தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்