Asianet News TamilAsianet News Tamil

பாஜக ஆட்சி அமைக்கலையாம்... நீங்க ஆட்சி அமைக்குறீங்களா..? சிவசேனாவுக்கு மகாராஷ்டிரா ஆளுநர் அழைப்பு!

ஆட்சி அமைக்க 105 உறுப்பினர்களைக் கொண்ட பாஜக மறுத்துவிட்ட நிலையில், அடுத்து 56 இடங்களில் வென்ற சிவசேனாவுக்கும் ஆளு ந பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார். அழைப்பு கடிதத்தில்,  ‘ஆட்சி அமைக்க விருப்பம் உள்ளதா என்பதையும், பெரும்பான்மை உள்ளதா என்பதையும் தெரிவிக்க வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது. 

Maharastra Governor write a letter to sivasena for forming government
Author
Mumbai, First Published Nov 11, 2019, 7:05 AM IST

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜகவைத் தொடர்ந்து சிவசேனாவுக்கு ஆளுநர் பகத்சிங் அழைப்பு விருத்துள்ளார்.

Maharastra Governor write a letter to sivasena for forming government
மகாராஷ்டிராவில் 288 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் பாஜக 105, சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றன. இதேபோல தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிராஸ் கூட்டணி 98 தொகுதிகளில் வெற்றி பெற்றன. பாஜக - சிவசேனா கூட்டணி 161 தொகுதிகளில் வெற்றி பெற்றதால், கூட்டணி ஆட்சி அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சுழற்சி முறையில் முதல்வர் பதவி, 50 சதவீத அமைச்சர் இடங்கள் என சிவசேனா விதித்த நிபந்தனையால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிபந்தனைகளை பாஜக ஏற்காததால், தேர்தல் முடிவு வெளியாகி 2 வாரங்களைக் கடந்தவிட்டபோதும் புதிய அரசு அமையவில்லை.Maharastra Governor write a letter to sivasena for forming government
இந்நிலையில் முந்தைய அரசின் பதிக்காலம் இன்றுடன் முடிவுக்கு வந்ததால், நேற்றைய தினம் பாஜகவைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரிடம் வழங்கினார். மாற்று ஏற்பாடுகள் செய்யும் வரை முதல்வர் பதவியில் நீடிக்குமாறு தேவேந்திர பட்னாவிசை ஆளுநர் கேட்டுக்கொண்டார்.  இந்நிலையில், மகாராஷ்டிராவில் அதிக இடங்களில் வென்ற கட்சி என்ற அடிப்படையில், புதிய அரசை அமைக்க வருமாறு பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிசுக்கு ஆளுநர் பகத்சிங் அழைப்பு விடுத்தார்.

 Maharastra Governor write a letter to sivasena for forming government
இதையடுத்து ஆளுநரின் அழைப்பு பற்றி பாஜக தலைவர்கள் ஆலோசித்தனர். பின்னர் பாஜக தலைவர்கள் ஆளுநரை சந்தித்து பேசினர். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், “ மஹாராஷ்டிராவில் மீண்டும் பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். ஆனால், சிவசேனா தலைவர்கள் பிடிவாதம் காட்டுகின்றனர். எனவே மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கும் நடவடிக்கையில் பாஜக ஈடுபடாது. மக்களின் தீர்ப்புக்கு மாறாக கூட்டணி தர்மத்தை மீறி எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து சிவசேனா ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது. அதற்காக, சிவசேனாவுக்கு எங்கள் வாழ்த்துகள்.” என்று தெரிவித்தார்.Maharastra Governor write a letter to sivasena for forming government
ஆட்சி அமைக்க 105 உறுப்பினர்களைக் கொண்ட பாஜக மறுத்துவிட்ட நிலையில், அடுத்து 56 இடங்களில் வென்ற சிவசேனாவுக்கும் ஆளு ந பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார். அழைப்பு கடிதத்தில்,  ‘ஆட்சி அமைக்க விருப்பம் உள்ளதா என்பதையும், பெரும்பான்மை உள்ளதா என்பதையும் தெரிவிக்க வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது. மாநில சட்டப்பேரவையில் 145 உறுப்பினர்களின் பலம் உள்ள கட்சி அல்லது கூட்டணி ஆட்சி அமைக்க முடியும். சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்தால் 154 உறுப்பினர்கள் கிடைப்பார்கள். ஆனால், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் எதிர்க்கட்சி வரிசையில் உட்காரப் போவதாக அறிவித்துள்ளன. 

Follow Us:
Download App:
  • android
  • ios