மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவ சேனாவின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. இதை சூசகமாக அந்தக் கட்சியின் செய்தி தொடர்பாளரும், மூத்த தலைவருமான சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவ சேனாவின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. இதை சூசகமாக 
அந்தக் கட்சியின் செய்தி தொடர்பாளரும், மூத்த தலைவருமான சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார். 


சிவ சேனா கட்சியின் 20 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அந்தக் கட்சியின் மூத்த தலைவரும் 
அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டேவுடன் குஜராத்தில் தஞ்சம் அடைந்து இருப்பதாக கூறப்பட்டது. 
இதையடுத்து இன்று 40 எம்.எல்.ஏக்களுடன் அசாம் மாநிலத்தில் இருக்கும் கவுகாத்தியில் 
தஞ்சம் அடைந்து இருப்பதாக ஏக்நாத் கூறியிருந்தார்.

இவர்களுடன் சிவ சேனா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சிவ சேனா மூத்த தலைவரும், 
செய்தி தொடர்பாளரும், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு வலதுகரமாக இருக்கும் சஞ்சய் ராவுத் 
தெரிவித்து இருந்தார். ஆனால், தற்போது மகாராஷ்டிரா சட்டசபை முடிவுக்கு 
வருகிறது என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் ராஜினாமா 
மகாராஷ்டிரா மாநிலத்தில் 40 எம்.எல்.ஏக்கள் போர்க் கோடி தூக்கி இருக்கும் நிலையில் 
வெறும் 55 எம்.எல்.ஏக்களுடன் கூட்டணி ஆட்சி நடத்தி வந்த முதல்வர் உத்தவ் தாக்கரே தனது 
பதவியை ராஜினாமா செய்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

சிறிது நேரத்திற்கு முன்புதான் தனது டுவிட்டர் பக்கத்தில் விதான் சட்டசபை 
முடிவுக்கு வருகிறது என்று சிவ சேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் சூசமாக தெரிவித்து இருந்தார். இதைத் 
தொடர்ந்து முதல்வர் உத்தவ் ராஜினாமா செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் சிறிது நேரத்தில் 
அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

பாஜகவின் தூண்டுதலில்தான் ஏக்நாத் இதுபோன்று நடந்து கொள்கிறார் என்று இன்று காலை 
சிவ சேனா கட்சியினர் மும்பையில் பாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்பி 
கோபத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.