மகாராஷ்ட்ராவில் பாஜக – சிவசேனா  கூட்டணி வெற்றி பெற்ற போதும் அக்கட்சிகளுக்குள் முதலமைச்சர் தொடர்பாக இழுபறி நீடித்து வருவதால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மராட்டியத்தில்  பாஜக ஆட்சி அமைக்க போவதில்லை என அம்மாநில பாஜக மாநிலத்தலைவர் சந்த்ரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார். மராட்டிய கவர்னரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மராட்டிய மக்கள் பாஜக - சிவசேனா கூட்டணியை நம்பி வாக்களித்தனர், ஆனால் தற்போது அதை சிவசேனா ஏற்க மறுத்து காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பில் இருப்பதாக கூறினார், இதனால் ஆட்சி அமைக்கும் முயற்சியை பாஜக கைவிடுகிறது என்றார்.

இந்தநிலையில்  56 இடங்களைக்கைப்பற்றிய 2-வது தனிப்பெரும் கட்சியான சிவசேனாவுக்கு கவர்னர் மாளிகை அழைப்புவிடுத்துள்ளது. மராட்டியத்தில் சிவசேனா கட்சி ஆட்சியமைப்பதற்கான விருப்பதையும், பெரும்பான்மையை தெரிவிக்குமாறு  கவர்னர் மாளிகை விளக்கம் கேட்டுள்ளது.

நாங்கள் ஆட்சியமைக்கப் போவதில்லை என பாஜக தெரிவித்த நிலையில் சிவசேனாவிற்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார்.

56 இடங்களில் வெற்றி பெற்ற 2-வது பெரிய கட்சியாக சிவசேனா உள்ளது.  சிவசேனா தனக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளோடு சேர்த்து 170-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறி வருவது குறிப்பிடத்தக்கது.