Asianet News TamilAsianet News Tamil

கடலில் மாயமான 9 மீனவர்கள் , 50 நாட்கள் கழித்து தகவல் கிடைத்தது.!! மியான்மரில் இருப்பதாக அமைச்சர் தகவல்.

ஆனால், 50 நாட்களை கடந்தும் காணாமல் போனவர்கள் நிலை என்ன? என்பது குறித்து எந்த தகவலும் இல்லாதிருந்தது. இதனால் சம்மந்தப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மிகவும் கவலையடைந்ததுடன். கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி காசிமேடு மீன்வளத்துறை அலுவலகத்துக்கு மீனவர்கள் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Magical 9 fishermen in the sea, 50 days later got the information. Minister informed of the presence of Myanmar.
Author
Chennai, First Published Sep 14, 2020, 3:00 PM IST

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஜூலை மாதம் மீன்பிடிக்க சென்றவர்கள் 9 மீனவர்கள் மாயமாகினர். தொடர்ந்து தேடுதல் முயற்சி மேற்கொண்டு, மத்திய அரசிற்கும் அழுத்தம் கொடுத்ததின் விளைவாக அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து, கடந்த ஜூலை 23 அன்று விசைப் படகில் மீன்பிடிக்கச் சென்ற ராயபுரத்தை சேர்ந்த 9 மீனவர்கள், கடந்த ஆகஸ்ட் 7 ந்தேதி கரை திரும்பியிருக்க வேண்டிய நிலையில் அவர்கள் கரை திரும்பவில்லை. காணாமல் போன மீனவர்களை ஜூலை 28 முதல் தொடர்புகொள்ள முடியவில்லை என சம்பந்தப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மீன் வளத்துறை இயக்குனரிடமும், சென்னை மாவட்ட ஆட்சியரிடமும், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடமும் மனு அளித்து, காணாமல் போனவர்களை மீட்க அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர். 

Magical 9 fishermen in the sea, 50 days later got the information. Minister informed of the presence of Myanmar.

ஆனால், 50 நாட்களை கடந்தும் காணாமல் போனவர்கள் நிலை என்ன? என்பது குறித்து எந்த தகவலும் இல்லாதிருந்தது. இதனால் சம்மந்தப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மிகவும் கவலையடைந்ததுடன். கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி காசிமேடு மீன்வளத்துறை அலுவலகத்துக்கு மீனவர்கள் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கடலோர காவல்படையை வைத்து தேடிகொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் சட்டப்படி கடலோர காவல்படை 60 கடல்மைல்களுக்கு அப்பால் சென்று தேடமுடியாது,  இந்திய கடற்படைதான் இந்த பணியைச் செய்ய முடியும். ஆகவே, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் காணாமல் போன மீனவர்களை தேட வேண்டும். இந்திய கடற்படை மற்றும் விமானப்படைகளை கொண்டு  தேடுதல் பணி நடத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. மேலும் காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினருக்கு அரசு உதவிகளை வழங்க வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.  

Magical 9 fishermen in the sea, 50 days later got the information. Minister informed of the presence of Myanmar.

எஞ்சின் கோளாறு காரணமாகவும், காற்றின் வேகம் காரணமாக அண்டை நாடுகளில் மீனவர்கள் தஞ்சம் அடைவது வழக்கமாக இருந்த வருகிறது.அந்த வகையில் மலேசியா, தாய்லாந்து, பங்களாதேஷ், மியன்மார் ஆகிய நாடுகளுக்கு மீனவர்கள் குறித்து தகவல் அளிக்கப்பட்டது.  இந்நிலையில் பர்மா, மியன்மார் நாடுகளில் தொடர்பு கொண்ட போது, மீனவர்கள் அங்கு பத்திரமாக இருப்பதாக உறுதியளிக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதேபோல் மீனவர்கள், அவர்களின் படகுகள் ஆகிய புகைப்படத்தை அவர்கள் அனுப்பி உள்ளனர். அதில் அவர்கள் நம் மீனவர்கள் தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் பத்திரமாக நம் நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும். விரைவாக 1 வாரத்தில் தமிழகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார். பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர்க்கு தலா ரூ.10 ஆயிரத்தை வழங்கினார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios