mafoi talks about edapaadi
முன்னாள் முதல் அமைச்சர் ஜெயல லிதாவின் மறைவினைத் தொடர்ந்து அதிமுக இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது…. தற்காலிக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில் பரப்பன ஆக்ரஹாரா சிறையில் இருக்க,, கட்சியை வழிநடத்துவதில் தட்டுத்தடுமாறி வருகிறார் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்….
அதிமுக தலைமையை எட்டிப்பிடிக்க ஒரு பக்கம் ஒ.பி.எஸ். போராட, மறுபுறம் மகுடத்தை தக்கவைக்க சசி அணி பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது.

11 சட்டமன்ற உறுப்பினர்கள், 10 க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் என ஒ.பி.எஸ். மத்தாப்பு காட்டினாலும், எஞ்சியவர்களை தன் பக்கம் நிலைநிறுத்திக் கொள்ள படாதபாடு படுகிறார் டிடிவி. தினகரன்….
சசிகலாவால் முதல் அமைச்சராக நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவுடேகரிடம் பேசுவதற்கு கூட அஞ்சுவதை நேற்று கண்கூடாகக் முடிந்தது.

நித்தம் நித்தம் புதிய திருப்பங்களால் தாறுமாராக உள்ள தமிழக அரசியல் களத்தை மேலும் தகிக்க வைத்திருக்கிறது ஒ.பி.எஸ். ஆதரவாளரும், ஆவடி சட்டமன்ற உறுப்பினருமான மாஃபா பாண்டியராஜனின் பேச்சு…. அம்பத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது “அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் விரைவில் நடைபெறும். பட்ஜெட் தாக்கலின் போது முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கல் ஏற்படும்” இவ்வாறு பாண்டியராஜன் தெரிவித்தார்.
