மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிபோல், தற்போதைய ஆட்சி நடைபெறவில்லை என்று ஓ.பி.எஸ். ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான மாஃபா. பாண்டியராஜன் கூறியுள்ளார்

அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு தொடர்பான நிபந்தனைகள் நிறைவேற்றுவது குறித்து எடப்பாடி பழனிசாமி அணி வெளிப்படையாக கூற வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மாஃபா. பாண்டியராஜன், சென்னை ஆவடியில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார். மேலும், அணிகள் இணைப்பு குறித்த நிபந்தனைகளை நிறைவேற்றுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அணி வெளிப்படையாக கூற வேண்டும் என்றார்.

எடப்பாடி பழனிசாமி அணி, வெளிப்படையாக நிபந்தனைகளை அறிவிக்கும்போது தானாக பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

மறைமுகமாக பேசுவது இணைப்புக்கு வழி வகுக்காது என்ற அவர், ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருப்பவர்கள் பதவிக்காக ஆசைப்படவில்லை என்றும் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிபோல் தற்போதைய ஆட்சி நடைபெறவில்லை என்றும் மாஃபா பாண்டியராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.