mafoi pandiarajan talks about neet
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு தற்காலிகமாக 2 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்க வாய்ப்பு உள்ளதாக ஒபிஎஸ் அணியின் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
மருத்து படிப்பிற்கான சீட்டுகளை நீட் என்ற தேர்வு மூலம் மூலம் மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும் எனமத்திய அரசு ஆணை பிறப்பித்தது.
இதற்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் தமிழக எதிர்கட்சிகள்போராட்டங்கள் நடத்தின. ஆனால் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி மத்திய அரசு கட்டுப்பாடுகளுடன் தேர்வைநடத்தி முடித்தது.
இதையடுத்து வந்த தேர்வு முடிவுகளில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் பெரும்பாலானோர் தேர்ச்சி பெறவில்லை.
இதனால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அமைச்சர்கள், மற்றும்முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரதமரை நேரில் சென்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு தற்காலிகமாக 2 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்க வாய்ப்பு உள்ளதாக ஒபிஎஸ் அணியின் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
2 ஆண்டு விலக்கு அளிப்பது குறித்து மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
