பாஜகவை புயல் மாதிரி அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை உயிரூட்டிக் கொண்டு இருக்கிறார் என்று கூறி இருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன்.

சென்னை: பாஜகவை புயல் மாதிரி அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை உயிரூட்டிக் கொண்டு இருக்கிறார் என்று கூறி இருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தில் பாஜகவின் மாநில தலைவராக பொறுப்பேற்ற நாளில் தீவிர சுற்றுப்பயணம் செய்து வருகிறார் அண்ணாமலை. புதியதாக பொறுப்பேற்றுள்ள திமுக தலைமையிலான அரசை கடுமையாக விமர்சிக்க தயங்குவது இல்லை. ஆனால் அதற்கு பதிலடி தரும்படி அமைச்சர்கள் பேட்டி இருப்பதால் தமிழக அரசியல் களம் சூடாகத்தான் இருக்கிறது.

இந் நிலையில் அண்ணாமலை, புயல்போல பாஜகவுக்கு உயிரூட்டி கொண்டு இருக்கிறார் என்று பாராட்டி தள்ளி இருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன். இது குறித்து சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:

பாஜக என்றாலே மெல்லிய பூங்காற்று என்று நினைக்கும் எண்ணம் இருக்கிறது. ஆனால் புயல் வேகத்தில் அக்கட்சிக்கு உயிரூட்டி கொண்டு இருக்கிறார் அன்பு தம்பி, என் கல்லூரி இளவல் அண்ணாமலை என்று பாராட்டி தள்ளி இருக்கிறார்.

தமிழகத்தில் அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவரது அறிவிப்பின் பெயரில் தமிழகம் முழுவதும் பாஜக போராட்டம் நடத்தியது நினைவிருக்கலாம்.