அமைச்சர் மஃபா பாண்டியராஜன் மு.க.ஸ்டாலினை விமர்சித்தது குறித்து முரசொலி நாளிதழ் மாஃபியா பாண்டி என நக்கலடித்து கட்டுரை வெளியிட்டுள்ளது.

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மிசா அமலுக்கு இருந்த காலகட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். ஆனால், அடி வாங்கியதை அழுத்தமாக அவர் பதிவு செய்து வருகிறார். ஆனால், எதற்காக அடித்தார்கள்? ஜனநாயகத்துக்கு குரல் கொடுத்ததற்காக அடித்தார்கள் என்று கூறுவது தவறு. அவருடைய தவறான செயல்களுக்காக குறிப்பாக, பாலியல் சார்ந்த பிரச்னைகளில் அவருடைய நிலைப்பாட்டுக்காக அடித்திருக்கலாம் என்று அனைவரும் சொல்கிறார்கள் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

அமைச்சர் பாண்டியராஜனின் இந்த பேசுக்கு திமுக தரப்பில் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தியாகம் என்றாலே என்னவென்றே அறியாத ஒரு அரசியல் வியாபாரி மாஃபா பண்டியராஜன் என விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளரும், திமுக எம்.எல்.ஏவுமான தங்கம் தென்னரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் அமைச்சர் பாண்டியராஜன் உடனடியாக தனது பேச்சுக்கு மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் மிசா காலகட்டத்தில் கைது செய்யப்பட்டது குறித்து அவதூறு கருத்துக்களை அமைச்சர் பாண்டிராஜன் பேசியதாக கூறி சென்னை அண்ணா நகரில் திமுகவினர் பாண்டிராஜனின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், அமைச்சர் பாண்டியராஜனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக, ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே வருகிற 7ஆம் தேதி கண்டன ஆர்பாட்டம் நடந்து வருகிறது. 

இதுகுறித்து, ’’அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே! உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே! நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்! முதல் முறை என் வீட்டுக்கு எதிரில் என் உருவத்திற்கு பாடை கட்டி இழுத்து தீக்கிரையாக்கியதைக் கண்டேன் ’’என தனது ட்விட்டர் பக்கத்தில் மஃபா பாண்டியராஜன் தெரிவித்து இருந்தார். 

இதனால் கடுப்பான முரசொலி நாளிதன், ஆண்டியும், போண்டியும் என்கிற தலைப்பில், 
ஆண்டி:- ஏன்ன்யா; சமீபகாலமாக மாஃபியா பாண்டி அதிகமாக உளறுகிறதே..? 

போண்டி:- ஆமாய்யா; எடப்பாடியைத் தூக்கிவிட்டு இந்த மாஃபியாவை சிம் ஆக்கப்போகிறது டெல்லி என்று எவனோ சொன்னானாம். அதனால் எங்கே மைக் பார்த்தாலும் நக்கி வருகிறது. 

ஆண்டி:- ஏன்ய்யா ; காட்டிக்கொடுப்பதில்தான் கில்லாடியாச்சே?
போண்டி:- ஆமாய்யா; அடுத்தவனை ஏய்த்துக் கொழுத்த உடம்புதானே அது!’’என வம்பிற்கிழுத்துள்ளது.