முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அ.தி.மு.க.வின் அவைத்தலைவராக இருந்து வருபவர் மதுசூதனன். முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருந்து வருகிறார்.

ஜெயலலிதா மறைவையடுத்து கடந்த ஆண்டு சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத் தேர்தலில் மதுசூதனன் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் மதுசூதனன் இதயகோளாறு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு  அங்கு தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது