தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக நீடித்து வந்த அதிகாரப் போட்டி நிறைவு பெற்றுள்ளது. .எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நேற்று ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்றுக் கொண்டது.
நாளை எடப்பாடி பழனிசாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ளார்.
அதே நேரத்தில் ஓபிஎஸ் நேற்று முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.தாங்கள்தான் உண்மையான அதிமுக என்று கூறிவரும் ஓபிஎஸ் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து,ஆதரவு திரட்டப் போவதாகவும் தெரிவித்தார்.

எம்எல்ஏக்கள் அவரவர் தொகுதிக்கு சென்று பொது மக்களை தேடிச்சென்று யாருக்கு ஆதரவு அளிக்கலாம் என கேட்டு தெரிந்து கொண்டு அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளியுங்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் இன்று முதல் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று வாக்காளர்களை சந்திக்கும் வகையில் வாக்காளர் பேரணி நடத்த உள்ளதாகவும் ஓபிஎஸ் தெரிவித்திருந்தார்.

அதன்படி தமிழகம் முழுவதும் இன்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வாக்காளர் பேரணி நடத்த முயன்றனர்.
ஓபிஎஸ் ஆதரவாளரான மதுரை மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர் சாலைமுத்து, உள்ளிட்ட ஏராளமானோர் இன்று வாக்காளர் பேரணி நடத்து முயன்றனர். அபோது அங்கு வந்த காவல் துறையினர் அவர்களைத் தடுத்ததோடு மட்டுமல்லாமல் கைது செய்தனர்.
இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தபோதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்கிறோம் என போலீசார் தெரிவித்தனர்.
