Asianet News TamilAsianet News Tamil

முழு கண் பார்வை இழந்த பூரண சுந்தரி ஐஏஎஸ்க்கு கண்ணொளி தந்த மதுரை எம்எல்ஏ..! பூரிப்பில் பூரணசுந்தரி குடும்பம்.

1970இல் கலைஞர் கருணாநிதி கொண்டு வந்த  இலவச கண்ணொளி திட்டம், ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றம், ஒரு அரசு திட்டம் இப்படித்தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையை உயர்த்த வேண்டும் என்கிற அளவிற்கு அனைவராலும் பாரட்டப்பட்ட ஒன்று தான் இலவச கண்ணொளி திட்டம். இதன் தொடர்ச்சியாக மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ டாக்டர். சரவணன் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற பூரணசுந்தரிக்கு கண்ணொளியை எப்படியாவது கொடுத்துவிட வேண்டும்.

Madurai MLA who lost her eyesight to Purana Sundari IAS ..! Puranasundari family
Author
Madurai, First Published Aug 22, 2020, 10:32 PM IST

 
1970இல் கலைஞர் கருணாநிதி கொண்டு வந்த  இலவச கண்ணொளி திட்டம், ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றம், ஒரு அரசு திட்டம் இப்படித்தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையை உயர்த்த வேண்டும் என்கிற அளவிற்கு அனைவராலும் பாரட்டப்பட்ட ஒன்று தான் இலவச கண்ணொளி திட்டம். இதன் தொடர்ச்சியாக மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ டாக்டர். சரவணன் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற பூரணசுந்தரிக்கு கண்ணொளியை எப்படியாவது கொடுத்துவிட வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை எடுத்து ஆர்கேம் என்பது (orcam specs)முழு கண்பார்வை இழந்தவர்களுக்கு பொறுத்தப்படும் கண்ணாடி.இதை வாங்கி கொடுத்து கண்ணொளி கொடுத்திருக்கிறார் எம்எல்ஏ டாக்டர்.சரவணன்.

Madurai MLA who lost her eyesight to Purana Sundari IAS ..! Puranasundari family

மதுரை மணிநகரத்தைச் சேர்ந்தவர் பூரண சுந்தரி ஐஏஎஸ் தேர்வில் மாநில அளவில் 286வது ரேங்க் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். அவர் சிறு வயதிலேயே கண்பார்வை குறைபாடு இருந்த போதும் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. பூர்ண சுந்தரி  திமுக தலைவர்  ஸ்டாலின்,திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். அதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் அவர்கள் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

Madurai MLA who lost her eyesight to Purana Sundari IAS ..! Puranasundari family

இணையதளம் மூலம் அந்த பெண்னிற்கு ESIGHT என்ற சுமார் 8 லட்சம் மதிப்பிலான அதிநவீன கண்ணாடியினை கனடா நாட்டில் இருந்து வரவழைத்து பார்வை கிடைக்க முயற்சி செய்தார். அப்பெண்னை மதுரை அரவிந்த் மருத்துவமனைக்கு தானே அழைத்துச் சென்று பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்தார். பரிசோதனையில் அவர் முழுபார்வையும் இழந்தகாரணத்தினால் அவருக்கு டிஇந்த கண்ணாடி பயனளிக்காது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். அதோடு விடவில்லை எம்எல்ஏ.. பார்க்கும் அனைத்தும் எழுத்துக்களையும் ஒலியாக கொண்டு செல்லும் ஆர்கேம் என்ற அதிநவீன கருவி பொருந்தப்பட்ட கண்ணாடியினை பொருத்தலாம் என்று மருத்துவர்கள் குழு ஆலோசனை வழங்கினர்.

Madurai MLA who lost her eyesight to Purana Sundari IAS ..! Puranasundari family

அதன் மதிப்பு 3 லட்சம். ORCAM கண்ணாடியினை எம்எல்ஏ டாக்டர் சரவணன் தனது சூர்யாதொண்டு நிறுவனம் மூலம் வழங்க முன்வந்துள்ளார். இதுகுறித்து எம்எல்ஏ டாக்டர் சரவணன் கூறும் போது.. "கண்ணொளி திட்டம் கொண்டு வந்தவர் தமிழின தலைவர் டாக்டர் கலைஞர்.எனவே திமுக தலைவர்  ஸ்டாலின் கரங்களால் அதிநவீன கண்ணாடியை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறியவர். அதுமட்டுமல்லாமல் பார்வையற்றவர்கள் படிக்கும் எழுதும் எழுத்துக்கள் தான் BRAILLE .இந்த எழுத்துக்களை அனைவருக்குமான ஆங்கில எழுத்துக்களாக அழகான வார்த்தைகளாக பிரிண்டரில் வெளிவரக்கூடியது தான்அதிநவீன ORBIT READER.DIGNIFY APP இந்த ஆப் டவுண்லோடு செய்து தமிழ்மொழியை தவிர மற்ற எந்த மொழிகளையும் உள்ளடக்கிய எழுத்துக்களை அப்படியே ஸ்கேன் செய்து படித்துக்காட்டும் தன்மை கொண்டது தான் இது. பார்வையற்றவர்களுக்கு இதுபோன்ற ஆப் டெவலப்பர்களுக்கு ஒரு கோரிக்கை தமிழ்மொழியையும் அதில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்றார்.

Madurai MLA who lost her eyesight to Purana Sundari IAS ..! Puranasundari family

 

Follow Us:
Download App:
  • android
  • ios