மதுரையில் பச்சைக்கல் மரகத லிங்கம் காணாமல் போனது தொடா்பாக, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார்  விசாரணை நடத்தினா்.சிவன் சொத்து குலநாசம் என்பார்கள்.. அந்த வகையில் சிவபெருமானையே திருடியிருக்கிறார்கள். மீண்டும் மரகதபச்சைகற்களான லிங்கம் வரும் என்கிற நம்பிக்கையில் சிவ பகத்தர்கள் காத்திருக்கிறார்கள்.
 


மதுரையில் பச்சைக்கல் மரகத லிங்கம் காணாமல் போனது தொடா்பாக, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார்  விசாரணை நடத்தினா்.மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அருகே இருந்த பழமையான குன்னத்தூா் சத்திரத்தில், இரண்டரை அடி உயர பச்சைக்கல் மரகத லிங்கம் வைக்கப்பட்டிருந்தது. இந்த கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டும் பணி கடந்த 2006 ஆம் ஆண்டு தொடங்கியது. அப்போது சத்திரத்தில் இருந்த மரகதலிங்கம் உள்ளிட்ட பொருள்கள், ராணி மங்கம்மாள் சத்திரத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டன. பின்னா் ராணி மங்கம்மாள் சத்திரம் புதுப்பிக்கும் பணி தொடங்கிய போது, பல கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் உள்ளிட்ட பொருள்கள் மாநகராட்சி கருவூலத்தில் வைக்கப்பட்டன.

இந்நிலையில்மாநகராட்சி கருவூலத்தில் இருந்த மரகதலிங்கம் காணாமல் போய்விட்டது என தல்லாகுளம் காவல் நிலையத்தில் 2013 இல் மதுரையைச் சோ்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் புகார் அளித்தார். மேலும், உயா்நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்தார். உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில், வழக்கை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரித்தனா். 2013 ஆம் ஆண்டு, அப்போதைய மாநகராட்சி உதவி ஆணையா் தலைமையில் 6 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மாநகராட்சி கமிசனராக நடராஜன் இருந்தார். அதன்பின்னா் மரகதலிங்கம் தொடா்பாக எந்த பேச்சும் எழவில்லை.இந்நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், காணாமல் போன மரகதலிங்கம் தொடா்பாக  மதுரையில் விசாரணை நடத்தினா். வழக்கின் புகார்தாரான முத்துக்குமாரிடம், காணாமல் போன மரகதலிங்கம் மற்றும் குன்னத்தூா் சத்திரத்தில் இருந்த பழமை வாய்ந்த பொருள்கள் தொடா்பாக விசாரித்தது அந்த டீம்.


 மாநகராட்சி அலுவலகத்தில் விசாரிக்கச் சென்றபோது, அங்கு அதிகாரிகள் விசாரணைக்கான அனுமதி கடிதத்தைக் போலீஸாரிடம் கேட்டனா். அனுமதி கடிதம் இல்லாததால், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தாமலேயே திரும்பிச் சென்றனா்.முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் மரகதலிங்க சிலை ஒன்றை மீட்டனா். அந்த மரகத லிங்கத்தை யாரும் இதுவரை உரிமை கோரவில்லை என்பதால், மதுரையில் காணாமல் போன மரகத லிங்கமாக இருக்கலாம் என்ற அடிப்படையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது."
காணாமல் போன மரகதலிங்கம் மாநகராட்சி அதிகாரிகளையை சுற்றி வருகிறது.அப்போது அந்த பகுதியில் பணியில் அதிகாரிகளுக்கு தெரிந்தே காணாமல் போயிருக்க கூடும் என்கிற சந்தேகத்தில் சிலை கடத்தல் தடுப்பு போலீசர் விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.