திருப்பரங்குன்ற இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு அரசியல்கட்சியினர் பணம் கொடுத்து வருவதால் இத்தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய கூறி சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் இந்த மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். அதில்" திருப்பரங்குன்ற இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது அதிகமாகிவிட்டது. ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் இதுவரை கோடிக்காணக்கான ரூபாயை வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக செலவழித்திருக்கிறார்கள். 

குறிப்பாக வாக்காளர்கள் தலா ஒருவருக்கு 1000 முதல் 2000வரை கொடுக்கிறார்கள் அரசியல் கட்சியினர். இது தேர்தல் விதிமுறைக்கு எதிரானது மேலும் இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தால் கண்டு கொள்வதே இல்லை. இத்தொகுதியில் போட்டியிடும் ஒவ்வொரு  வேட்பாளரும் தேர்தல் கண்க்குகளை பொய்யாக காட்டி வருகின்றனர். 

எனவே திருப்பரங்குன்ற இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும்" என மனுவில் தாக்கல் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் நிஷாபானு, தண்டபாணி ஆகியோர் அவசர வழக்காக விசாரித்தனர். 

விசாரணையின் பின்பு தற்போது திருப்பரங்குன்ற தேர்தல் விவகாரங்களில் நீதிமன்றமானது தலையிடாது. வேண்டுமென்றால் இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள்.