Asianet News TamilAsianet News Tamil

மதுரை: முழு பார்வையற்ற மாணவி ஐஏஎஸ் தேர்வில் வெற்றி.! குவியும் பாராட்டுமழையில்நனையும் பூரணசுந்தரி.!

  சிவில் சர்வீஸ் தேர்வில் சாதனை படைத்த மதுரையைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பூரணசுந்தரிக்கு வாழ்த்துக்கள் பல்வேறு தரப்பில் இருந்து குவிந்த வண்ணம் உள்ளது.4முறை சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றியடைய முடியாத நிலையில் துவண்டுவிடாமல் தொடர்ந்து செய்த விடாமுயற்சியால் 2019ம் ஆண்டு மீண்டும் தேர்வு எழுதி இந்திய அளவில் 286வது இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார். 
 

Madurai Full sighted student wins IAS exam! Accumulating compliments.!
Author
Madurai, First Published Aug 5, 2020, 10:22 PM IST

சிவில் சர்வீஸ் தேர்வில் சாதனை படைத்த மதுரையைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பூரணசுந்தரிக்கு வாழ்த்துக்கள் பல்வேறு தரப்பில் இருந்து குவிந்த வண்ணம் உள்ளது.4முறை சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றியடைய முடியாத நிலையில் துவண்டுவிடாமல் தொடர்ந்து செய்த விடாமுயற்சியால் 2019ம் ஆண்டு மீண்டும் தேர்வு எழுதி இந்திய அளவில் 286வது இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார். 

Madurai Full sighted student wins IAS exam! Accumulating compliments.!
இந்திய நாட்டின் உயரிய பதவியாக கருதப்படும் இந்திய ஆட்சிப் பணித் தேர்வான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் 829 பேர் தேர்ச்சிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை சிம்மக்கல் மணி நகரம் பகுதியை சேர்ந்த முருகேசன்  ஆவுடைதேவி தம்பதியினரின் மகள் பூரண சுந்தரி. 5 வயதில் பார்வை நரம்பு சுருங்கியதால் பார்வையை முழுமையாக இழந்தார் பூரண சுந்தரி.ஒன்றாம் வகுப்பு முதல் 12வகுப்பு வரை பள்ளியில் முதல்  மாணவியாக தேர்ச்சி பெற்றார்.10ம் வகுப்பில் 471 மதிப்பெண். 12ம் வகுப்பில் 1092. மதிப்பெண்ணும் பெற்றும் சாதனை படைத்துள்ளார்.பிஏ.இலக்கியம் பயின்றுள்ளார்இவர்.

பெற்றோர் கொடுத்த தன்னம்பிக்கை உற்சாகத்தால் பூரணசுந்தரி இந்த உயரிய பதவிக்கு படிக்க முடிந்தது. இந்த வெற்றி குறித்து பூரணசுந்தரி பேசும் போது..
என் தந்தை மார்க்கெட்டிங் பணி செய்து பல்வேறு பொருளாதார நெருக்கடியில் தன்னை படிக்க வைத்தார்.என் குடும்ப வறுமையை ஒவ்வொரு நாளும் நன்றாக படித்து நல்ல அரசு வேலையை பெறவேண்டும் என்ற லட்சியத்துடன் கடந்த 2016 முதல் குரூப் தேர்வு, வங்கி போட்டி தேர்வு, குடியுரிமை பணி தேர்வு என 20 க்கும் மேற்பட்ட போட்டி தேர்வுகளை எழுதினேன்.நான் எழுதிய பல தேர்வுகளில் தோல்வியை தழுவினாலும் தன்னால் வெற்றி பெற முடியும் என்ற தன்னம்பிக்கையை மட்டும் கைவிடவில்லை.
 4வது முறையாக, கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற குடியுரிமை பணிக்கான சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன்.முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற வங்கி தேர்வில் வெற்றி பெற்று அரசு ஊரக வளர்ச்சி வங்கியில் கிளர்க்காக பணிபுரிந்து வருகிறேன்.  தற்போது பெற்றுள்ள வெற்றி எனக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது.தான் ஒரு பார்வை மாற்றுத்திறனாளியாக இந்த வெற்றி இலக்கை அடைய எண்ணற்ற சவால்களை சந்தித்திருக்கிறேன். என் வெற்றிக்கு அப்பா அம்மா நண்பர்கள் கொடுத்த தன்னம்பிக்கை ஊக்கம் ஆகியவை தான் என்னை வெற்றி பெற வைத்துள்ளது என்றார்.மேலும்

Madurai Full sighted student wins IAS exam! Accumulating compliments.!
போட்டி தேர்விற்காக தான் தனியாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் தங்கி பயின்ற போது அங்குள்ள நண்பர்கள் கொடுத்த உற்சாகமும் சிலர் செய்த பொருளாதார உதவியும் மறக்க முடியாத ஒன்றாக தன்னுள் இருக்கிறது.  சிறு வயது முதல் எனது அம்மா சொல்லி தரும் பாடங்களை கற்று வந்த தமக்கு போட்டி தேர்வுகளிலும் எனது அம்மா கற்றுக் கொடுத்தது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எனது ஆசிரியராக இருந்து பல்வேறு வகையில் உறுதுணையாக இருந்தவர் அம்மா.குடிமைப்பணியில் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி எத்தனை தடைகள் வந்தாலும் அதனை எதிர்கொண்டு அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவும் பாலமாக இருப்பேன். இவரது வெற்றியை மத்திய தொகுதி எம்எல்ஏ பிடிஆர் பழனிவேல்தியாகராஜன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.இவரைப்போன்று மதுரை எம்பி வெங்கடேசன் போனில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.,

Follow Us:
Download App:
  • android
  • ios