Asianet News TamilAsianet News Tamil

MK Stalin : முதல்வரை பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை..ஆனால் ? - முதல்வரை புகழ்ந்த நீதிமன்றம் !

முதல்வரின் பணியை பாராட்ட விட்டாலும் பரவாயில்லை . மைக் கிடைத்தது என்பதற்காக அவதூறாக பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று கடும் கண்டனத்தை நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.

Madurai court said tamil nadu cm mk stalin working is good and saatai durai murugan bail if reject
Author
Madurai, First Published Dec 10, 2021, 8:39 AM IST

முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் மு.க ஸ்டாலினை அவதூறாக பேசி யூ டியூபர் சாட்டை துரைமுருகன் வீடியோ வெளியிட்டிருந்தார். இதனால், அவர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனையடுத்து, யூ டியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரி, மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

Madurai court said tamil nadu cm mk stalin working is good and saatai durai murugan bail if reject

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் எவ்வளவு பணிபுரிய முடியுமோ, அதையும் தாண்டி பணியாற்றிவருகிறார். முதல்வரின் பணியை பாராட்ட விட்டாலும் பரவாயில்லை. மைக் கிடைத்தது என்பதற்காக அவதூறாக பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாடு அரசு மீது என்ன குற்றம் கண்டீர்கள் ?  நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழியை மீறி சாட்டை துரைமுருகன் ஒரு வார்த்தை பேசி இருந்தாலும் அவரது ஜாமீன் ரத்து செய்யப்படும். 

Madurai court said tamil nadu cm mk stalin working is good and saatai durai murugan bail if reject

சாட்டை துரைமுருகன் பேசியதெல்லாம் உட்கார்ந்து கேட்பதற்கு நீதிமன்றத்திற்கு நேரம் கிடையாது அரசு தரப்பில் அவர் என்ன பேசி உள்ளார் என்பதை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யுங்கள் என்றார். அரசு மீது என்ன குற்றம் கண்டு விட்டீர்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, அரசு தரப்பு வழக்கறிஞர் சாட்டை துரைமுருகன் பேசியதை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும், ஒரு வார்த்தை அவதூறாக தேவையில்லாமல் பேசி இருந்தால் நிச்சயமாக அவருக்கு வழங்கபட்ட  ஜாமீன் ரத்து செய்யப்படும் என எச்சரித்து வழக்கு விசாரணை செவ்வாய் கிழமை ஒத்திவைத்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios