Asianet News TamilAsianet News Tamil

அதிமுக ஆதரவு வேட்பாளர் வெற்றி செல்லாது..! நீதிமன்றம் அதிரடி..!

விசாரணை நடத்திய நீதிபர்கள் பிரியதர்ஷினி சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவராக பதவி ஏற்க இடைக்கால தடை விதித்தது. வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் அதிமுக ஆதரவு வேட்பாளர் ப்ரியதர்ஷினியும் வெற்றி செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

madurai court cancelled admk supporter's victory
Author
Madurai, First Published Feb 6, 2020, 3:11 PM IST

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இருக்கிறது சங்கராபுரம் யூனியன். இங்கிருக்கும் சங்கராபுரம் பஞ்சாயத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருக்கின்றனர். அண்மையில் நடந்து முடிந்த ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தலில் சங்கராபுரம் பஞ்சாயத்திலும் தேர்தல் நடைபெற்றது. இங்கு தலைவர் பதவிக்கு தேவி, பிரியதர்ஷினி ஆகிய இருவர் போட்டியிட்டனர்.

madurai court cancelled admk supporter's victory

பிரியதர்ஷினி ஆளும் அதிமுக ஆதரவுடன் போட்டியிட்டார். தேவிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்திருந்தது. தேர்தல் நடந்து முடிந்து வாக்கு எண்ணிக்கையில் தேவி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சான்றிதழும் கொடுக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் பிரியதர்ஷினியும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவருக்கும் சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த தேவி தரப்பு,  பிரியதர்ஷினி வெற்றியை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு பதிவு செய்தனர். 

madurai court cancelled admk supporter's victory
அதனடிப்படையில் விசாரணை நடத்திய நீதிபர்கள் பிரியதர்ஷினி சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவராக பதவி ஏற்க இடைக்கால தடை விதித்தனர். வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் அதிமுக ஆதரவு வேட்பாளர் ப்ரியதர்ஷினியும் வெற்றி செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. முதலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் ஆதரவு வேட்பாளர் தேவி வெற்றி செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'வாடா.. செருப்பை கழட்டுடா..! சிறுவனை அழைத்து தனது காலனியை கழட்ட சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்...

Follow Us:
Download App:
  • android
  • ios