Asianet News TamilAsianet News Tamil

கருப்புக் கொடி வீரன் வைகோ அவர்களுக்கு நன்றி !! போராட்டத்தை சப்புன்னு ஆக்கிய பாஜக !!

மதுரை மற்றும் திருப்பூருக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவித்த வைகோவுக்கு மதுரை பகுதி பாஜகவினர்  நன்றி சொல்லி போஸ்டர் ஒட்டி கலாய்த்துள்ளனர். கருப்பு கொடி வீரன் என வைகோவுக்கு அடைமொழியும் கொடுத்துள்ளனர்.

madurai bjp wall poter aginst vaiko
Author
Madurai, First Published Feb 13, 2019, 11:39 AM IST

பிரதமர் மோடி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக வருகை தந்தார். இதனைத் தொடர்ந்து  திருப்பூரில் நலத்திட்டங்களை  தொடங்கி வைப்பதற்காக வந்தார் இந்த  இரு நிகழ்வுகளின்போதும் மதிமுக சார்பில் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டப்பட்டது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் கருப்பு பலூன்களும் பறக்கவிடப்பட்டன.

madurai bjp wall poter aginst vaiko

இந்நிலையில் வைகோ கருப்புக் கொடி காட்டியதற்கு அவரை கலாய்த்து மதுரை பாஜக  சார்பில் வால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் மதுரை மற்றும் திருப்பூரில் நடைபெற்ற பிரதமர் மோடியின் மாநாட்டை மாபெரும் வெற்றி அடையச் செய்த வைகோ அவர்களுக்கு நன்றி என குறிப்பிடப்பட்டுள்ளது.

madurai bjp wall poter aginst vaiko

மேலும் மதுரையில் 500 பேரையும், திருப்பூரில் 375 பேரையும் அழைத்து வந்து கருப்பு பலூன் பறக்கவிட்டு  வித்தை காட்டியதற்கு நன்றி என்றும் அந்த வால் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்து  கன்னியாகுமரியில்  நடைபெறவுள்ள மோடியின் மாநாட்டை வெற்றி அடையச் செய்ய 1000 பேரை  அழைத்து வந்து கருப்பு கொடி மற்றும் கருப்பு பலூன் பறக்க விட்டு விளையாட்டு  காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன் என சங்கர் பாண்டி என்பவர் போஸ்டர் அடித்துள்ளார்.

madurai bjp wall poter aginst vaiko

தயவு செய்து கருப்புக் கொடி பழசாகியிட்டதால் புதிய கொடியை வாங்கிவருமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.வைகோ ஆதரவு அளித்தால் அந்தக் காரியம் உருப்படாது என்றும்  உதாரணம் விடுதலைப் புலிகள், மக்கள் நலக் கூட்டணி மற்றும் தற்போது திமுக எனவும் அவர்கள் அந்த வால் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர். 

மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு வைகோ நடத்திய போராட்டத்தை ஒரு வால் போஸ்டர் அடித்து பாஜகவினர் உப்புச்சப்பில்லாமல் ஆக்கிவிட்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios