Asianet News TamilAsianet News Tamil

மேல பாஜக... அண்ணி தலைமை செயலர்! திணறும் போலிஸ் அசால்ட்டா திருப்பதியில் ரவுண்டடிக்கும் எஸ்.வி.சேகர்...

Madras high court dismissed the anticipatory bail plea of SVe Shekher
Madras high court dismissed the anticipatory bail plea of SVe Shekher
Author
First Published May 11, 2018, 3:25 PM IST


பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டது தொடர்பான வழக்கில் பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது நிலையில் இன்னும் எஸ்.வி சேகர் இருக்கும் இடம் தெரியாமல் வலைவீசி தேடி வருகிறார்களாம்.

பெண் பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக் கொடுத்தது சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர்களை மிகவும் இழிவுபடுத்தி ஒரு பதிவை தமது சமூக வலைதளத்தில் எஸ்.வி.சேகர் பதிவிட்ட அவரை ஒரு மாதத்துக்கும் மேலாக போலீசார் கைது செய்யாமலும் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமலும்

Madras high court dismissed the anticipatory bail plea of SVe Shekher

தினமும் காலையில், மந்தவெளியில் டிப்போ அருகே இருக்கும் வீட்டின் சுற்று வட்டாரத்தில் வாக்கிங் செல்கிறார். எப்படி அவருக்கு இந்த தில்  எனக் கேட்டால் மத்தியில் பாஜக ஆட்சி, தமிழகத்தில் எஸ்.வி.சேகரின் அண்ணியான கிரிஜா வைத்தியநாதன் தலைமைச் செயலாளர் என  அவருக்கு அடைக்கலம் கொடுக்க ஆளா இல்லை என அசால்ட்டாக பேசுகிறார்கள்.

தற்போது எஸ்.வி.சேகரின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் ரத்து செய்த பின்னணியில், இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அவரை கைது செய்ய பல்வேறு தரப்பினரும் குரலெழுப்பும் நிலையில், இன்னும் அவரை நெருங்காமல் இருக்கிறது.இந்நிலையில், எஸ்.வி.சேகரின் ஜாமீன் மனு மீது மீண்டும் விசாரணை நடைபெற்றது.

இன்றைய விசாரணையின் போது எஸ்.வி. சேகரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் எந்த நேரத்திலும் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திருப்பதியில் வைகுண்டம் 2 ஆம் வாயில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வழியாக தரிசனம் செய்துவிட்டு ஹாயாக வந்துகொண்டிருப்பதாக ஒரு புகைப்படம் உலாவுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios