அமைச்சர் ஜெயக்குமார் மீது பாலியல் புகார் கூறிய சிந்து மற்றும் அவரது தாயார் சாந்தி மீது விரட்டி விரட்டி வழக்குகள் பாய்ந்து வருகின்றன. இப்போது பதியப்பட்டுள்ள வழக்கில் அவர்கள் கம்பி எண்ணப்போவது உறுதியாகி இருக்கிறது. 

அக்டோபர் மாத இறுதியில், தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், ஒரு பெண்ணிடம் பேசுவது போன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவின் ஆண் குரல், தன்னால் கர்ப்பமான ஒரு பெண் குறித்து பேசியது. அந்த ஆண் குரலுக்குச் சொந்தக்காரர் ஜெயக்குமார் தான் என்று பேசப்பட்டு வந்த நிலையில், அடுத்த நாளே குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார்.

ஏற்கெனவே மிரண்டி பணம் வாங்கியதாக சிந்து மற்றும் அவரட்து தாயார் சாந்தி மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அவர்கள் பாண்டிச்சேரியில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சிந்து மிரட்டி பணம் பறித்ததாக அவர்களது வழக்கறிஞரை மிரட்டி பண மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரான கணேசன். இவர் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராகப் பாலியல் புகார் கூறிய சிந்து சார்பாக  பழைய வழக்குகளில் ஆஜரானவர். இந்த நிலையில், சாந்தி மற்றும் சிந்து மீது முத்தையால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அவர் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

’’கடந்த 2014-ம் ஆண்டு சென்ட்ரல் பேங்க் பிராட்வே கிளை மேலாளர் ஒருவர் சாந்தியிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்து கொண்டது தொடர்பாக அவர்கள் என்னை அனுகினர். சிந்து மற்றும் அவரது தாயார் சாந்திக்காக முத்தையால்பேட்டை காவல் நிலையத்தில் ஆஜரானேன். சாந்தி சார்பாக புகார் கொடுக்க ஆஜரானதற்கு அவருக்குக் கொடுக்க வேண்டிய ஊதியத்தைத் தராமல் ஏமாற்றி வந்தனர்.

சில மாதங்கள் கழித்து சாந்தி மற்றும் அவரது மகள் சிந்து என்னிடம் வந்து எழும்பூரில் உள்ள இருதய ஆண்டவர் ஆலயத்தில் உள்ள பாதிரியார் சிந்துவிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் என்னிடம் கேட்டனர். அப்போது ''நீங்கள் எனக்குக் கொடுக்க வேண்டிய பழைய ஊதியத் தொகையைக் கொடுங்கள். பின்னர் ஆஜராகிறேன்'' என்று தெரிவித்தேன். 

வீட்டிற்குச் சென்று பணம் எடுத்து வருகிறேன் என்று கூறிச் சென்றவர்கள் திரும்பி வரவில்லை. இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்  பிராட்வே சாலையிலுள்ள பிராட்வே தியேட்டர் அருகில் சாந்தியை நேரில் பார்த்த நான், எனக்குத் தரவேண்டிய ஊதியத்தைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர் ’ஊதியத்தைக் கேட்டால் உங்கள் மீது பாலியல் புகார் கொடுத்து விடுவேன். இல்லையென்றால் அடியாட்களை வைத்து தொலைத்து விடுவேன்’ என கொலை மிரட்டல் விடுத்தார்’’ எனத் தெரிவித்துள்ளார். இந்த புகார் மனு கடந்த செப்டம்பர் மாதம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து இப்போது சிந்து மற்றும் அவரது தாயார் சாந்தி மீது மோசடி, கொலை மிரட்டல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.