Asianet News TamilAsianet News Tamil

மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகிறார் எல்.முருகன்.. பாஜக தலைமை அதிரடி..!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் எல்.முருகன் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்ட மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்தார்.

Madhya Pradesh Rajya Sabha candidates L Murugan
Author
Madhya Pradesh, First Published Sep 18, 2021, 11:59 AM IST

மத்திய இணை அமைச்சராக உள்ள எல்.முருகன் மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட உள்ளார். 

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு மத்திய அமைச்சராக இருந்தவர் தாவர் சந்த் கெலாட். இவர் தற்போது கர்நாடக மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் இவர் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை முறைப்படி ராஜினாமா செய்துவிட்டார். இதனால், மத்திய பிரதேசத்தில் மாநிலங்களவை இடம் ஒன்று காலியாக இருந்து வந்தது. 

Madhya Pradesh Rajya Sabha candidates L Murugan

இந்நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் எல்.முருகன் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்ட மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்தார். மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட நிலையில் தற்போது மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களைவை பதவிக்கான தேர்தல் அக்டோபர் 4ம் தேதி நடைபெற  உள்ள நிலையில், வேட்பாளராக எல்.முருகனை பாஜக தலைமை அறிவித்துள்ளது.

Madhya Pradesh Rajya Sabha candidates L Murugan

மத்தியப்பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெறுவதால் போதுமான பலம் இருப்பதால், மாநிலங்களவைக்கு முருகன் தேர்வு செய்யப்படுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios