Asianet News TamilAsianet News Tamil

மதுவந்தி ஒரு காமெடி.. அதையெல்லாம் சீரியசாக எடுத்துக்கொள்ள கூடாது.. பங்கம் செய்த Sv.Sekar.

அதேபோல் மதுவந்தி குறித்து பேசி அவர், " பிராமணர்கள் மட்டும் புத்திசாலிகள்"  என்று மதுவந்தி பேசி இருப்பதை யாரும் பொருட்படுத்த தேவையில்லை, அது ஒரு "காமெடி ஸ்டேட்மென்ட்"  மதுவந்தி என்பவர் அரசியலுக்கு புதுசு, 

Madhuvanthi is a comedy .. it should not be taken seriously .. Sv.Sekar who Criticized.
Author
Chennai, First Published Dec 15, 2021, 6:01 PM IST

பிராமணர்கள் புத்திசாலிகள் என்ற மதுவந்தியின் கருத்தையெல்லாம் யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது அது ஒரு "காமெடி ஸ்டேட்மென்ட்" என்று திரைப்பட நடிகர் மற்றும் அரசியல் பிரமுகர் எஸ்.வி சேகர் விமர்சித்துள்ளார். பிராமணர்களாக பிறந்தவர்கள் அறிவாளிகளாக இருப்பார்கள் என  பாஜகவை சேர்ந்த மதுவந்தி கூறியிருந்த நிலையில் எஸ்.வி சேகர் இவ்வாறு விமர்சித்துள்ளார்.

தமிழக பாஜகவின் சர்ச்சை பிரமுகர்களில் ஒருவர்தான் ஒய்ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி, பல விஷயங்களில் பாஜகவுக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் பேசியும் குரல் கொடுத்தும் வருகிறார். பணமதிப்பிழப்பு விவகாரத்தில் மதுவந்தி உளறி கொட்டிய  வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இவர் பாஜகவின் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராகவும் உள்ளார்.  "பிராமணர்களாக பிறத்தவர்கள் அறிவாளிகளாக இருப்பார்கள்"  என பேசியது பின்னர் பத்மா சேஷாத்திரி பள்ளியில் நடந்த பாலியல்  விவகாரத்தில் ஆசிரியருக்கு சாதகமாக பேசியது போன்றவை கடுமை விமர்சனத்துக்கு உள்ளானது. பிஎஸ்பிபி பள்ளி விவகாரத்தில் ஒட்டுமொத்த தமிழகமும் பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று குரல் கொடுத்து வந்த நிலையில், மதுவந்தி மட்டும் எத்தனை பேர் வந்தாலும் எனது பாட்டி கட்டிகாத்த புகழுக்கும், அவர் உருவாக்கியிருந்த ஸ்தாபனத்திற்கும் (பள்ளிக்கூடத்திற்கும்) அவமரியாதை ஏற்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன் என கடுமையாக எச்சரித்தது கடும் விமரிசனத்திற்குள்ளானது. அவரை பலரும் கண்டித்தனர்.

Madhuvanthi is a comedy .. it should not be taken seriously .. Sv.Sekar who Criticized.

இதேபோல் பலரும் அவரை சங்கிகள் என்று விமர்சித்து வந்த நிலையில், ஆமாம் நான் சங்கிதான் என அவர் பேசியதை பலரும் ட்ரோல் செய்து அவரை கலாய்த்தனர்.  இது எல்லாவற்றிற்கும் மேலாக "பிராமணர்களாக பிறந்தவர்கள் அறிவாளிகளாக இருப்பார்கள்" என அவர் பேசியதுதான் இன்றளவும் மது வந்தியின் ஹைலைட் கமெண்டஸ்சாக பார்க்கப்படுகிறது. இதைவைத்தே இன்னும் கூட அவரை பலரும் கலாய்த்தும் விமர்சத்தும் வருகின்றனர். இந்நிலையில் தற்போதைய அரசியல் சூழல் குறித்து காமெடி நடிகர் எஸ்.வி சேகர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் மதுவந்தியின் இக்கருத்தை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.  எஸ்.வி சேகர் பேசியது பின்வருமாறு:- 

இந்து அறநிலைத்துறை என்பது  இந்து அநீதி துறையாக உள்ளது. என்னைப்பொறுத்தவரையில் கோயில்களுக்கு இந்து அறநிலைத்துறை என்பது அவசியமற்றது. நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது எவரிடத்திலும் எதற்காகவும் கை நீட்டியது இல்லை, இதை என் அரசியல் சாதனை என்றே நான் கூறுவேன். அதேபோல்  மனிதனுடைய மலத்தை மனிதனே அல்ல கூடாது என சட்டமன்றத்தில் முதல்முதல் குரல் கொடுத்து என்னுடைய மயிலாப்பூர் தொகுதிக்காக கழிவுகளை அப்புறப்படுத்துவதற்காக 2 ஜெட்டப் மெஷின்களை வாங்கி கொடுத்தேன் அது என்னுடைய சாதனை.

அதேபோல் பிணம் எரிப்பவர்களுக்கு சட்டமன்றத்தில் வாதாடி அவர்கள் அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க ஏற்பாடு செய்தேன், இது இரண்டும் நான் செய்த சிறந்த சாதனை என நான் கூறிக் கொள்வேன். எந்த ஊழலும் இல்லாவிட்டால், அரசு கொடுக்கும் நிதியில் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் 50% பயன்படுத்தினாலே இந்தியா தன்னிறைவு அடைந்து விடும், ஆனால் அப்படி நடக்கவில்லை என்பதுதான் வருத்தம். ஆனால் அதற்கான முதற்படியை மோடி அவர்கள் தொடங்கியிருக்கிறார். இந்தியாவின் உட்கட்டமைப்பு உள்ளிட்ட எல்லாவற்றையும் சரிசெய்து மொத்த நாட்டையும் ஒழுங்குபடுத்தி சீரமைக்க காலம் அவகாசம் தேவை, அடுத்த ஐந்து ஆண்டும் மோடி தான் பிரதமராக வரப் போகிறார். அதற்குள்ளாக இந்தியா  தன்னிறைவு பெற்ற நாடாக விளங்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Madhuvanthi is a comedy .. it should not be taken seriously .. Sv.Sekar who Criticized.

தொடர்ந்து பேசிய அவர், இன்று நடிகர்கள் ஆடம்பரமாக கார் வாங்குகிறார்கள், வருமான வரியை  செலுத்துவதை தவிர்ப்பதற்காகவே அதுபோல ஆடம்பரமான கார்கள் வாங்கப்படுகிறது. ஒவ்வொருவரும் உழைத்து சம்பாதித்த பணத்தில்தான் வாங்குகிறார்கள். அவர்கள் அவ்வாறு செய்வதை தவறு என்று நான் சொல்ல மாட்டேன். சட்டத்தில் உள்ள வாய்ப்புகளை அவர்கள் பயன்படுத்துவதை யாரும் தவறு என்றும் கூற முடியாது என்றார்.

அதேபோல் மதுவந்தி குறித்து பேசி அவர், " பிராமணர்கள் மட்டும் புத்திசாலிகள்"  என்று மதுவந்தி பேசி இருப்பதை யாரும் பொருட்படுத்த தேவையில்லை, அது ஒரு "காமெடி ஸ்டேட்மென்ட்"  மதுவந்தி என்பவர் அரசியலுக்கு புதுசு,  வயதில் மிகவும் சிறியவர், எனது நண்பர் ஒய்.ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி, பொது வெளியில்  பேசும் போது மிக கவனமாக பேச வேண்டும்,  சுந்தர் பிச்சை இருக்கிறார் என்றால்  அந்த சமூகத்திற்கே அவர்தான் அடையாளம் என்று சொல்வதையும் எப்படி ஏற்க முடியாதோ அது போல தான் இதுவும் என அவர் விமர்சித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios