madhusudhanan says that 20 mla from edappadi team will join with ops

எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்து 20 எம்எல்ஏக்கள், ஓபிஎஸ் அணிக்கு விரைவில் வருவார்கள் என அவை தலைவர் மதுசூதனன் தெரிவித்தார்.

வடசென்னை தெற்கு மாவட்டம் அதிமுக (புரட்சி தலைவி) சார்பில் ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரின் பெயரில் கழக நற்பணி மன்றங்களின் பட திறப்பு விழா ராயபுரத்தில் நடந்தது. அவைத்தலைவர் மதுசூதனன், கட்சி கொடியேற்றி மன்றத்தை திறந்து வைத்தார்.

இதேபோல், பிச்சாண்டி தெரு, ராமன் தெரு, வேலாயுத பாண்டியன் தெரு, ஆதம் தெரு, தொப்பை தெரு, மாடசாமி தெரு உள்பட 12 இடங்களில் மன்றங்கள் திறக்கப்பட்டன.

இதைதொடர்ந்து, ஆர்.கே. நகர் தண்டையார்பேட்டையில் மகளிர் நற்பணி மன்றத்தை திறந்து வைத்ததார். அப்போது செய்தியாளர்களிடம், மதுசூதனன் கூறியதாவது:-

தினகரன் பிடியில் இருக்கும் எம்எல்ஏக்களை உடனடியாக சஸ்பென்ட் செய்யவேண்டும் சசிகலாவின் தயவால் நிதியமைச்சரான ஜெயக்குமார், தற்போது நாடகத்தை நடத்தி கொண்டு இருக்கிறார். அவர் ஒரு விளம்பர வெறியர்.

இவர்கள் நடத்தும் நாடகத்தில் ஓ.பன்னீர்செல்வம் சிக்கமாட்டார். எடப்பாடி அணியில் இருந்து விரைவில் எம்எல்ஏக்கள் 20 பேர், ஓ.பி,எஸ் அணியில் இணைய பேகிறார்கள்.

எடப்பாடி அரசு விரைவில் தானாகவே கவிழ்ந்துவிடும். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் அணி காரணமாக இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.