madhusudhanan opinion about dinakaran leading
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஆளுங்கட்சியான அதிமுகவின் வேட்பாளர் மதுசூதனனைவிட சுமார் 5900 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் முன்னிலை வகிக்கிறார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மொத்தம் 19 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முதல் சுற்று முடிந்து இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது.
இரண்டாவது சுற்று நடந்துவரும் நிலையில், இதுவரை எண்ணப்பட்ட 18633 வாக்குகளில் 10421 வாக்குகளைப் பெற்று தினகரன் முன்னிலையில் உள்ளார். மதுசூதனன் 4521 வாக்குகளையும் திமுகவின் மருது கணேஷ் 2383 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
ஆளும் அதிமுகவின் வேட்பாளரான மதுசூதனனைவிட 5900 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் முன்னிலையில் உள்ளார்.
இந்நிலையில், தினகரன் முன்னிலை குறித்து கருத்து தெரிவித்த மதுசூதனன், போக போக தெரியும், இந்த பூவின் வாசம் புரியும் என தெரிவித்தார். தற்பொழுதுதானே தொடக்கம்.. அடுத்தடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறட்டும். இறுதியில் நான் தான் வெற்றி பெறுவேன் என்ற தொணியில் மதுசூதனன் தெரிவித்தார் என கருதப்பட்டது.
ஆனால், போக போக தெரியும்.. இந்த பூவின் வாசம் புரியும் என மதுசூதனன் சொல்லிய சில நிமிடங்களில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மோதல் மூண்டது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிமுகவினர் ரகளையில் ஈடுபட்டனர். தினகரன் ஆதரவாளர்களுக்கும் அதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
