maathavan is waiting outside of the deepa over
நடு தெருவில் நிற்கும் மாதவன்....!
வரும் 12 ஆம் தேதி அதாவது நாளை மறுதினம் ஆர் கே நகரில் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது ஆனால், பண பட்டுவாடா நடைபெற்றதை உறுதி செய்த இந்திய தேர்தல் ஆணையம், ஆர் கே நகர் தேர்தலை ரத்து செய்து நேற்றிரவு உத்தரவு பிறப்பித்தது
இந்நிலையில், இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த ஜெயலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஆர்கே நகர் இடைதேர்தல் ரத்து செய்தது குறித்த தன் கருத்தை தெரிவித்தார்
அப்போது, செய்தியாளர்களின் அடுக்கடுக்கான கேள்விக்கு பதிலளித்த தீபா, அதிமுக அம்மா வேட்பாளர் டிடிவி தினகரனை பற்றி கருத்து தெரிவித்தார். தினகரன் போட்டியிட வாய்ப்பே கொடுத்திருக்க கூடாது என்றும், ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னணியில் சசிகலா குடும்பம் உள்ளது என்றும் குறிப்பிட்டார் .
செய்தியாளர் சந்திப்புக்கு பின், தன் வீட்டில் உள்ள அலுவலகத்தில் அமர்ந்திருந்த தீபாவை திடீரென ஆச்சர்யமூட்டும் வகையில், கணவர் மாதவன் தீபாவின் முன் வந்து நின்றுள்ளார் .
மாதவனை பார்த்த தீபா, தங்கள் வேலையாட்களிடம் அலுவலகம் மற்றும் வீட்டில் உள்ள மற்ற அறைகளை உள்தாழிட்டு கொள்ளுமாறு கோபமாக சொல்லிவிட்டு, மேல் உள்ள தன் அறைக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் தீபா தன்னை உள்ளே அழைக்க மாட்டாரா என்ற ஏக்கத்துடன் வீட்டின் வெளியில் மாதவன் காத்திருக்க, கோபமாக தன் அறைக்கு சென்ற தீபா, மாதவன் கீழே நின்றுக் கொண்டு என்ன செய்கிறார் ? செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுப்பாரா ? அல்லது அப்படியே திரும்பி போகபோறாரா என , தன் வீட்டின் அறையில் உள்ள ஜன்னல் வழியாக பார்த்துள்ளார்.
இது தான் சங்கதி......
