குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக தலைநகர் டெல்லி மாஜ்பூர் பகுதியில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. சிஏஏ-க்கு எதிரானவர்களும் ஆதரவாளர்களும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இந்த வன்முறையில் வீடுகள், கடைகள், வாகனங்கள் சூறையாடப்பட்டன.
டெல்லி காவல்துறையைக் கட்டுப்படுத்தும் மத்திய பாஜக அரசு விரைந்து செயல்பட்டு, இயல்புநிலையை மீட்டெடுக்க வேண்டும். ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக தலைநகர் டெல்லி மாஜ்பூர் பகுதியில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. சிஏஏ-க்கு எதிரானவர்களும் ஆதரவாளர்களும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இந்த வன்முறையில் வீடுகள், கடைகள், வாகனங்கள் சூறையாடப்பட்டன. இதனையடுத்து போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி வன்முறையைக் கலைத்தனர். மேலும் டெல்லியில் பல இடங்களில் கல்வீச்சு, தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன. கர்தாம்புரி பகுதியில் போராட்டக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர்.
இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவில், “டெல்லி வன்முறையில் மக்கள், பத்திரிகையாளர்கள் மீதான கொடூர தாக்குதல் ஆபத்தான விகிதத்தை எட்டியுள்ளது. டெல்லி காவல்துறையைக் கட்டுப்படுத்தும் மத்திய பாஜக அரசு விரைந்து செயல்பட்டு, இயல்புநிலையை மீட்டெடுக்க வேண்டும். ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Feb 25, 2020, 11:09 PM IST