திருவாரூர் இடைத் தேர்தலில் மு.க.அழகிரி களமிறங்குவதாக யூகங்களின் அடிப்படையிலேயே பல செய்திகள் வெளிவந்தன. ஆனால், களமிறங்கி ஆட்டம் காட்டப்போவதை உறுதி செய்திருக்கிறார் மு.க.அழகிரி. இதனால், திகிலடைந்து கிடக்கிறது திமுக. 

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்குகிறது. இன்று முக்கிய வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திமுக, அதிமுக, அமமுக இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. அதனால், சுயேச்சை வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், தி.மு.க-வில் சேர்க்கப்படாததால் ஸ்டாலின் மீது உச்சக்கட்ட கோபத்தில் இருக்கும் மு.க.அழகிரி திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு பலத்தைக் காட்டியே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகக் கூறி வந்தனர். இந்நிலையில் திருவாரூரில் மு.க அழகிரி அங்கு களமிறங்குவது உறுதியாகி இருக்கிறது. மு.க.அழகிரியின் ஆதரவாளர் ஒருவர் இன்று விநியோகிக்கப்பட்ட வேட்பு மனுவை வாங்கிச் சென்றுள்ளார். அது அழகிரி போட்டியிருவதற்கான வேட்பு மனு எனக் கூறப்படுகிறது.

  

முன்பே தனக்கு திருவாரூர் தொகுதியில் உள்ள செல்வாக்கு குறித்து அறிந்து கொண்டு திரும்பினார் அழகிரி. 'கருணாநிதியின் மகன் ' என்கிற ஒரு சொல்லே தன்னை வெற்றி பெற வைக்கும் என்று அவர் நம்புவதாக கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள். அழகிரி தேர்தலில் போட்டியிடும் இந்தத் திட்டம் அவரது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. `தேர்தல் நின்று நம்ம பலத்தைக் காட்டியே ஆக வேண்டும்' என்று அவர்கள் தேர்தல் பணிக்கு தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. இடைத்தேர்தல் வெற்றி பார்முலாவில் வல்லவர் அழகிரி என்பதால் திமுகவுக்கு திருவாரூரில் கடும் நெருக்கடி ஏற்படுவது உறுதி.