உதயநிதியை இருகப்பற்றிக்கொள்ளுங்கள்.. அசைக்க முடியாத கோட்டையாக இளைஞர் அணியை மாற்றிவிட்டார்- மு.க.ஸ்டாலின்

வலிமையான கொள்கை உறுதியான பிடிப்பு இனிமையான பரப்புரை தொடர்ச்சியான உழைப்பு இதெல்லாம் தம்பி உதயநிதி கிட்ட இயற்கையாகவே இருக்கிற பண்புகள் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
 

M K Stalin congratulated the DMK youth team conference KAK

இளைஞர் அணி மாநாடு- ஸ்டாலின் வாழ்த்து

இளைஞர் அணி மாநாடு சேலத்தில் இன்று தொடங்கிய நிலையில், தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இளைஞர் அணி மாநாடு உருவானதை சுட்டிக்காட்டி, வரும் காலத்தில் இன்னும் வளர்ச்சி அடைய வேண்டும் என கோரி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில்,  நான் வளர்ந்த, என்னை வளர்த்து விட்ட, நான் உருவாக்கின என்னை உருவாக்கின பாசறை தான் இளைஞர் அணி.  அப்படி பார்த்தா என்னுடைய தாய் வீட்டில் இருக்கிற தம்பிமார்களே,  

நான் இன்னைக்கு கோடிக்கணக்கான உடன் பிறப்புகளுக்கு தலைமை தொண்டனாக இருக்க கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டோட முதலமைச்சரராக இருக்கிறேன். என்னோட 13 வயசுல பள்ளியில் படிக்கிற காலத்துல கோபாலபுரம் பகுதியில், கழகத்துக்கான பிரச்சார நாடகங்களை நடத்தினேன். 1967 முதல் கழகம் சந்தித்து அனைத்து தேர்தலையும் தேர்தல் பரப்புரையிலும் ஈடுபட்டேன்.

இளைஞர் அணி உருவானது எப்படி.?

 இனி வாழ்க்கையே கழகத்துக்காகவும் தமிழ்நாட்டு மக்களுக்காக தான் உறுதியாக இருந்தேன்.  கழக பொறுப்புகளில் என்னுடைய முதல் பொறுப்பு பகுதி பிரதிநிதி,  அடுத்து மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு உறுப்பினரா இருந்தேன்.   அந்த சமயத்துல இளைஞர் அணி உருவாக்கணும்னு தலைவர் கலைஞரும் இனமான பேராசிரியரும் நினைச்சாங்க நிறைய இளைஞர்கள் கழகத்தை நோக்கி வராங்க அவர்களை வழிநடத்த வலிமையான இளைஞர் அணி வேணும் 1980 ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி மதுரை ஜான்சிராணி பூங்காவில் கழக இளைஞரணி துவக்கப்பட்டது. இந்தியாவிலேயே ஒரு அரசியல் கட்சியில இளைஞரணி தொடங்கப்பட்டது அதுதான் முதல் முறை. திமுகவின்  துணை அமைப்பாக உருவாக்கப்பட்டு 1981ம் ஆண்டு புதுச்சேரியில் நடந்த பொது குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது.  

உதயநிதியை இருகப்பற்றிக்கொள்ளுங்கள்

1983 ஆம் ஆண்டு இளைஞர் அணியோடு இரண்டாவது ஆண்டு விழா திருச்சியில் நடந்த பிறகு இளைஞர் அணிக்கு ஐந்து பேர் கொண்ட அமைப்பு குழுவை தலைவர் கலைஞர் அவர்களும் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களும் உருவாக்கினாங்க.  அந்த ஐந்து பேரில் நானும் ஒருத்தன் பின்னாடி இந்த குழு ஏழு பேர் குழுவா ஆச்சு.  தமிழ்நாடு முழுக்க நாங்க பயணம் செஞ்சோம் அதுக்கப்புறம் தான் இளைஞர் அணியில் செயலாளர்கள் என்ற பொறுப்பு உருவாக்கப்பட்டு நான் செயலாளராக நியமிக்கப்பட்டேன்.   அன்றைய தினத்தில் இருந்து தான் இளைஞர் படையை வழிநடத்துற பெரும் பொறுப்பு என்கிட்ட வந்து சேர்ந்தது. தமிழ்நாட்டில் என்னுடைய கால் படாத கிராமங்களே இல்லைன்னு சொல்ற அளவுக்கு பயணம் செய்தேன்.

 நம்ம இயக்கத்தில் புது ரத்தம் பாத்திரத்திற்கு இளைஞர்கள் தான் அடித்தளமாக அமைச்சது சுற்றுப்பயணங்கள் பொதுக்கூட்டங்கள், திருமண விழாக்கள். மாநாடுகள், போராட்டங்கள் என நான் எப்பவும் சுறுசுறுப்பா இருக்க காரணமே இளைஞர் அணி தான்.  உழைப்பு உழைப்பு உழைப்புன்னு தலைவர் கலைஞர் என்னை பாராட்டினார். இன்றைக்கு இளைஞரணி வழிநடத்த உங்களுக்கு உதயநிதி கிடைத்துள்ளார். அவரை இருகப்பற்றிக்கொள்ளுங்கள். இந்த பொறுப்புக்கு வந்த கொஞ்ச காலத்திலேயே இளைஞரணி அசைக்க முடியாத கோட்டையா கட்டி எழுப்பி வருகிறார் தம்பி உதயநிதி.  வலிமையான கொள்கை உறுதியான பிடிப்பு இனிமையான பரப்புரை தொடர்ச்சியான உழைப்பு இதெல்லாம் தம்பி உதயநிதி கிட்ட இயற்கையாகவே இருக்கிற பண்புகள்.  

M K Stalin congratulated the DMK youth team conference KAK

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யனும்

அப்படிப்பட்டவர் இளைஞர் அணி வழி நடத்துற காலத்தில் திராவிட இயக்கத்தோடு அடிப்படை கொள்கைகள் எல்லாத்தையும் வென்றெடுத்த காலமா அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.  நாங்க இளைஞர் அணியில் இருந்த காலத்துல தலைவர் கலைஞரும். பேராசியரும்  எங்க மேல வச்சிருந்த நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றின மாதிரி இப்போ என்னுடைய எதிர்பார்ப்பு பூர்த்தி செய்து வெற்றி கொடி கட்டு வெற்றிப்படையா செயல்படுவது உங்கள் செயல்பாடுகளில் தொடர்ந்து தெரியனும்.  இந்த இரண்டாவது மாநாடு இணையற்ற மாநாடா அமையனும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

இளைஞர் அணி மாநாட்டில் உதயநிதிக்கு பட்டாபிஷேகம்.. வாயை வாடகைக்கு விடும் கமல்.. இறங்கி அடிக்கும் செல்லூர் ராஜு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios