Asianet News TamilAsianet News Tamil

நான் கலைஞர் மகன்யா ! பாஜக தூதுவர்களை துரத்தி அடித்த மு.க.அழகிரி !!

மு.க.அழகிரியிடம் பாஜகவில் இணைய வேண்டும் என்று பிரஷர் கொடுத்த அக்கட்சியின் முக்கிய தூதர்களிடம் கலைஞர் மகன்யா நான் ! ஓடிப்போயிடுங்க என துரத்தி அடித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

m.k.alagiri not join bjo
Author
Madurai, First Published Sep 11, 2019, 7:24 PM IST

கருணாநிதி உயிருடன் இருந்தபோது  அவரது மகன் மு.க.அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அவர் உயிருடன் இருந்தபோதோ எப்படியாவது திமுகவில் இணைய பெரு முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை.

கடந்த 2018 ஆம் ஆண்டு கருணாநிதி மறைந்த பின்னரும் அவர் திமுகவில் இணைய தீவிர முயற்சி செய்தார். கடைசி வரை அவரால் திமுகவில் சேர முடியவில்லை. இதையடுத்து அவர் தனிக்கட்சி தொடங்கப் போவதாக தகவல்கள் வெளியாகின.

m.k.alagiri not join bjo

பின்னர் ரஜினி புதுக்கட்சி தொடங்கினால் அவருடன் இணைந்து செயல்படுவார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில்தான் அழகிரியை பாஜகவில் இணைக்க அக்கட்சியின் முக்கிய சில தலைவர்கள் முயற்சி மேற்கொண்டனர். அதிமுக-பாஜக-ரஜினி –அழகிரி கூட்டணி இருக்கும் என்றும் கூட சில ஹேஷ்யங்கள் வெளியாகின.

m.k.alagiri not join bjo

இதனிடையே பாஜக முக்கிய தலைவர்கள் சிலர் அழகிரியை சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது அவரை பாஜகவில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் அவர்களிடம் நான் கலைஞர் மகன்யா ! என்னப்போயி வேறு கட்சியிலே சேரச் சொல்றீங்களே என குரலை உயர்த்தி கம்பீரமாக கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜக தலைவர்கள் உடனடியாக அங்கிருந்து கிளம்பிவிட்டனர். 

m.k.alagiri not join bjo

தன்னால் ஆக்டிவாக இருக்க முடியவில்லையே என மனக்கஷ்டத்துடன் அழகிரி இருந்தாலும், விரைவில் உற்சாகமாக களம் இறங்குவார் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios