Asianet News TamilAsianet News Tamil

Breaking நுரையீரல் தொற்று குறைகிறது... சசிகலாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றம்.. தலைமை மருத்துவர் தகவல்..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றத்துடன் சீரா உள்ளது என பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை கூறியுள்ளது. 

Lung infection decreases ... Sasikala health improves well
Author
Bangalore, First Published Jan 23, 2021, 10:27 AM IST

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றத்துடன் சீரா உள்ளது என பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை கூறியுள்ளது. 

இது தொடர்பாக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- சசிகலாவின் உடல்நிலை முழு ஒத்துழைப்பு தருவதாகவும், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.  நுரையீரல் தொற்று குறைகிறது. சசிகலா விக்டோரியா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற விருப்பம் தெரிவித்துள்ளார். 

Lung infection decreases ... Sasikala health improves well

உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை சசிகலாவுக்கு அளிக்கப்படுகிறது. சசிகலாவுக்கு ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு 95 சதவீதத்திலிருந்து 98 சதவீதமாக அதிகரித்துள்ளது. தனியார் மருத்துவமனைக்கு மாற்றும் கோரிக்கையை நிராகரித்தது உண்மைதான். விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் இருக்கிறது என தலைமை மருத்துவர் ரமேஷ் கிருஷ்ணா தகவல் தெரிவித்துள்ளார். மேலும், சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று குறைந்து வருகிறது எனவும் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios