Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் மலர்ந்தது தாமரை... பரிசாக இன்னோவா கார்.. அடிச்சுத்தூக்கும் பாஜக..!

4 பாஜக எம்.எல்.ஏ.க்களை வென்று கொடுத்த மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார்களை பரிசாக அளிக்க உள்ளதாக மாநிலத்தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார். 

Lotus blossomed in Tamil Nadu ... Innova car as a gift .. BJP to step on ..!
Author
Tamil Nadu, First Published May 11, 2021, 3:33 PM IST

4 பாஜக எம்.எல்.ஏ.க்களை வென்று கொடுத்த மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார்களை பரிசாக அளிக்க உள்ளதாக மாநிலத்தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார். 

நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், திமுக 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் வென்றது. இதில் அதிமுக 65 இடங்களை கைப்பற்றியது. Lotus blossomed in Tamil Nadu ... Innova car as a gift .. BJP to step on ..!

இந்தத் தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கும், அதேவேளையில் பாஜக 4 தொகுகளில் வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. இதில், கோவை தெற்கு தொகுதியில் மட்டுமே அரசியலுக்கு புதுமுகமான கமல்ஹாசனை பாஜக வீழ்த்தியது. மற்ற மூன்று இடங்களில் பாஜக வீழ்த்தியிருப்பது பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற  திமுகவை என்பது அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.Lotus blossomed in Tamil Nadu ... Innova car as a gift .. BJP to step on ..!

6 முறை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்து 7ஆவது முறையாக வெற்றி பெற்று, 75 வயதில் சட்டப்பேரவைக்குள் நுழைந்தார் நாகர்கோவில் தொகுதியில் வெற்றி பெற்ற எம்.ஆர்.காந்தி. மேலும், மொடக்குறிச்சியில் சரஸ்வதி, கோவை தெற்கில் வானதி சீனிவாசன், நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.

ராஜ்பவனில் கடந்த 7ஆம் தேதி எளிமையாக நடைபெற்ற விழாவில், தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஸ்டாலினை தொடர்ந்து, புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். Lotus blossomed in Tamil Nadu ... Innova car as a gift .. BJP to step on ..!

தமிழகத்தில் பாஜகவுக்கு இடமில்லை என்றனர். ஆனால், தமிழகத்தில் பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றது. அதே நேரத்தில், புதுச்சேரியிலும் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வெற்றிபெற்ற நான்கு எம்.எல்.ஏ.,க்களையும் வெற்றிபெற வைத்த மாவட்டத் தலைவர்களுக்கும் இன்னோவா காரை வாங்கிக் கொடுத்துள்ளார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios