கூவத்தூரில் உச்சக்கட்ட பரபரப்பு ..!! சசிகலாவை முற்றுகையிட பொதுமக்கள் தீவிரம்...தொடர் தள்ளுமுள்ளு...
தமிழக அரசியல்
தமிழகத்தில், அதிமுக கட்சியிடையே ஏற்பட்ட பிளவு காரணமாக பெரும் பரபரப்பு நிலவி வரும் நிலையில், நிலைமையை சமாளிப்பதற்காக, சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள , கூவத்தூர் சொகுசு மாளிகைக்கு விரைந்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா.
சமாதானத்தில் இறங்கிய சசிகலா :
அதிமுக கட்சி இரண்டாக உடைந்ததால், சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக, பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் மீதமுள்ள சில பல எம்எல்ஏக்களை தனக்கு ஆதரவாகவே வைத்துக்கொள்வதற்காக,சசிகலா போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கூவத்தூர் விரைந்தார் சசிகலா :
பன்னீர் செல்வத்திற்கு தொடர்ந்து ஆதரவு பெருகி வரும் நிலையில், தற்போது மற்ற எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த, எம்எல்ஏக்கள் தங்கியுள்ள கூவத்தூர் சொகுசு பங்களாவுக்கு நேரடியாக சென்றுள்ளார்.
பேச்சு வார்த்தை :
எம் எல் ஏக்கள் உடனான பேச்சுவார்த்தைக்கு பின், தற்போது வெளியே வந்துள்ள சசிகலாவை அப்பகுதி பொதுமக்கள் சூழ்ந்து முற்றுகை செய்ய திட்டமிட்டுள்ளதால், போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ..
இந்நிலையில், சாலின் இரு மருங்கிலும் பொதுமக்கள் குவிந்துள்ளதால், போலீசார் அவர்களை களைய சொல்லி கேட்டனர் . ஆனால் அவர்கள் மறுக்கவே, தற்போது பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. மேலும் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களையும் சசிகலா ஆதரவாளர்கள் தாக்கியதாக செய்திகள் வெளியாய் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், சில எம் எல் ஏக்கள் அதே சொகுசு பங்களாவில் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
