Asianet News TamilAsianet News Tamil

ஆண்டவா..300 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த வேன். ரத்தக்களரியான ஆன்மீக பூமி. தலையில் அடித்து கதறிய முதல்வர்

மலையின் உச்சியில் நடந்த இந்த விபத்தை அப்பகுதி மக்கள் அடையாளம் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், போலீசார் மற்றும்  எஸ்.டி.ஆர்.எப் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

Lord..the van overturned in a 300 feet abyss. Bloody spiritual earth. The chief who was Screaming.
Author
Chennai, First Published Nov 1, 2021, 9:45 AM IST

உத்தரகாண்ட் மாநில சாலைவிபத்தில் வேன் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 13  பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 300 அடி பள்ளத்தாக்கில் வேன் தலைகுப்புற  கவிழ்ந்து இந்த கோர விபத்து நிகழ்ந்தது.ஆன்மீக பூமியான உத்தரகாண்டில் அடுத்தடுத்து விபத்துக்கள் நடந்து உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 16 பேரை ஏற்றிச் சென்ற வாகனம் ஒரு ஆபத்தான வளைவில் திரும்பியபோது 300 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இது ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் இயற்கை பேரிடர்களாலும், விபத்துகளாலும் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இதையும் படியுங்கள்:எதிர் கட்சியா இருந்த போது என்னென்ன பேசுனீங்க.. திமுகவின் இரட்டை வேடம்.. ஸ்டாலினை பிரிச்சு மேய்ந்த ஓபிஎஸ்.

வழக்கம்போல சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழையால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது, அங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 64 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காணாமல் போயினர், இது அந்த மாநிலத்தை ஒட்டு மொத்தமாக நிலைகுலையச் செய்துள்ளது. நைனிடால், அல்மோரா, சம்பாவத், பிதொரோகர், உத்தம்சிங் நகர், சமோலி, பாகேஸ்வர் ஆகிய பகுதிகளில் மட்டும் 39 பேர் பலியாகினர். ஒன்பது வீடுகள் முற்றிலும் தரைமட்டமானது. சாலைகள் முற்றிலுமாக அங்கே துண்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்து அம்மாநில முதல்வர் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் நிதி அறிவித்துள்ளார். இந்த துயர சம்பவத்தில் இருந்து அம்மாநில மீண்டு வருவதற்குள் மற்றொரு துயரம் அங்கு அரங்கேறியுள்ளது.

Lord..the van overturned in a 300 feet abyss. Bloody spiritual earth. The chief who was Screaming.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டம் சக்கர தாவில்  இந்த கோர விபத்து நடந்துள்ளது, சுற்றுலா தளமான டேராடூனில் ஞாயிற்றுக்கிழமை மலைப்பகுதியில் விகாஸ் நகரில் பேருந்து ஒன்று ஆபத்தான சாலையில் பயணித்தது, அப்போது ஆபத்தான வளைவில் பேருந்து இயக்க முற்பட்டபோது 300 அடி பள்ளத்தாக்கில் அந்த பேருந்து தலைகுப்புற கவிழ்ந்தது. 16 பேரை ஏற்றிச் சென்ற வாகனம், டேராடூன் மாவட்டத்தில் உள்ள சக்ரதா பகுதியில் உள்ள புல்ஹாட்-பைலா சாலை வழியாக விகாஸ் நகர் செல்லும் வழியில் அடுபுடாப்பி பள்ளத்தாக்கில் விழுந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் பேருந்தில் இருந்த 13 பயணிகள் உடல் சிதறி உயிரிழந்தனர். அதில் மூன்று பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த போது மொத்தம் வாகனத்தில் 16 பேர் மட்டுமே இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: தமிழக மக்களுக்கு பயங்கர எச்சரிக்கை.. அடுத்த 4 நாட்களுக்கு குறிப்பா இந்த மாவட்ட மக்கள் எச்சரிக்கையா இருங்க.

மலையின் உச்சியில் நடந்த இந்த விபத்தை அப்பகுதி மக்கள் அடையாளம் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், போலீசார் மற்றும் எஸ்.டி.ஆர்.எப் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். உள்ளூர் வாசிகளின் உதவியுடன் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, பள்ளத்தாக்கில் சிக்கிய 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். விகாஸ் நகர் விபத்து குறித்து உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த உத்தரகாண்ட் மாவட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். விபத்து குறித்த முழு விவரம் இன்னும் தெரியவில்லை. 

Lord..the van overturned in a 300 feet abyss. Bloody spiritual earth. The chief who was Screaming.

டேராடூன் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து கருணை தொகையாக தலா 2 லட்சம் வழங்கப்படும் என்று காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதேபோல விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர்  புஷ்கர் சிங் தாமி  இரங்கல் தெரிவித்துள்ளதுடன், பலியானோர் குடும்பங்களுக்கு தலா 50,000 ரூபாயும் காயமடைந்தவர்களை 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் விபத்துச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios