இந்தியா முழுவதும் 17-வது மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைப்பெற்று வரும் நிலையில் கடைசிக் கட்ட மக்களவை தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனைத் தொடந்து  மே -23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு நாள் தாமதமாக 24ம் தேதி முடிகள் வெளியாகலாம் எனப்படுகிறது. 

இந்திய தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாநிலத்தின் தேர்தல் ஆணையர்களுடன் வாக்கு எண்ணும் மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை செய்து வருகிறார். 

மேலும் டெல்லியில் இருந்து தேர்தல் மேற்பார்வையாளர்கள் குழு அதிகாரிகள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் நேரில் சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் வாக்கு எண்ணிக்கை மே-23 ஆம் தேதி நடைப்பெற உள்ளதால் மக்களவை தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாக மே- 23 ஆம் தேதி அன்று மாலை அல்லது 24-ம் தேதி காலை ஆகலாம் என இந்திய தலைமை தேர்தல் துணை ஆணையர் சுதீப் ஜெய்ன் தனியார் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார்.

ஆகையால் துள்ளியமான ரிசல்ட் 24ம் தேதியே தெரியவரும் எனக் கூறப்படுகிறது.