Local Body election will be conduct very soon told OPS

சீக்கிரமே உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என்றும், நீதிமன்றம் உத்தரவிட்டதும் எலக்சன்தான் என்றும் தெரிவித்த துணை முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளாட்சித் தேர்தல்கனை நடத்துவதற்கு தமிழக அரசு தயாராக இருப்பதாகவும் கூறினார்.

தமிழக உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 24 -ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையம் செப்டம்பரில் அறிவிப்பு வெளியிட்டது. அடுத்த நாளே வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் மனுத்தாக்கல் செய்தனர். 

இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக் கூறி, உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்று கூறி, உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் டிசம்பர் 31 -ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறும், அதுவரை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அலுவலரை நியமிக்கவும் உத்தரவிட்டார். 

ஆனால் ஓர் ஆண்டுக்கு மேலாக ஆகியும் இன்னும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறமல் இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு கடந்த நவம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது, அப்போது பதிலளித்த தமிழக அரசு, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தொகுதி மறுவரையறை நடைபெற்று வருகிறது. 2018 பிப்ரவரியில் தான் தொகுதி மறுவறையறை முடிவடையும், அதனால் 2018 பிப்ரவரி வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்தது.

அதிமுகவில் தொடர்ந்து நிலவிவரும் உட்கட்சிப் பூசல் காரணமாகவே உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் என்னதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், உள்ளாட்சித் தேர்தல்கனை நடத்துவதற்கு தமிழக அரசு தயாராக இருப்பதாகவும், நீதிமன்றம் உத்தரவிட்டதும் எலக்சன் நடக்கும் என்றும் தெரிவித்தார்