Asianet News TamilAsianet News Tamil

ரஜினிகாந்த் திடீர் அறிவிப்பு... இடைத்தேர்தலை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலிலும் ஜகா வாங்கிய ஆண்டவர்..!

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களுக்குத் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, 27 மாவட்டங்களில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, அதிமுக தேர்தலுக்கு தயாராகிவிட்டது. ஆனால், திமுக தேர்தலை எதிர்கொள்ள தயக்கம் காட்டி வருகிறது. 

local body election...makkal needhi maiam will not participate
Author
Tamil Nadu, First Published Dec 8, 2019, 5:09 PM IST

ரஜினி அறிவிப்பை அடுத்து உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களுக்குத் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, 27 மாவட்டங்களில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, அதிமுக தேர்தலுக்கு தயாராகிவிட்டது. ஆனால், திமுக தேர்தலை எதிர்கொள்ள தயக்கம் காட்டி வருகிறது. இதனிடையே, உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என ரஜினி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

local body election...makkal needhi maiam will not participate

இந்நிலையில், ரஜினிகாந்த முடிவை அடுத்து, கமல்ஹாசன் வெளியிட்ட செய்தி குறிப்பில் "தமிழ்நாட்டில் நிகழவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் முழுமையாக மக்களின் தேர்வாக இருக்கப் போவதில்லை எனும் உண்மை அனைவரும் அறிந்ததே. இந்த உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பங்கு பெறுவதால் கிட்டக் கூடிய முன்னேற்றம் சொற்பமானது. மாற்றத்தை இலட்சியமாகக் கொண்டுள்ள மக்கள் நீதி மய்யம் அதைத் தவணைமுறையில் கொஞ்சம் கொஞ்சமாக பெறுவதில்  எந்த சாதனையும் இல்லை.

மக்கள் நீதி மய்யத்தின் வெற்றிக்கான வித்து சாதுர்யமோ பண பலமோ அல்ல. நேர்மையும் மக்கள் பலமும் ஆகும். இத்தேர்தலில், மக்கள் பங்கீடு மிகக் குறைவாக இருக்கும் என்பது உறுதியாவிட்டது. ஊழல் கட்சிகள் தங்களுக்குள் போட்டுக் கொண்ட வியாபாரப் பங்கீடு மட்டுமே அரங்கேறப்போகிறது. என்பதை பகிரங்கப்படுத்தப் படாத நிஜம். மக்கள் நலன் நோக்கிய பயணமாக இந்த உள்ளாட்சித் தேர்தல் இருக்கப் போவதில்லை. ஆதலால் மக்கள் நீதி மய்யத்தார் ஏற்கனவே இரு கட்சிகள் எழுதி இயக்கும் அரசியல் நாடகத்தில் எந்தப் பாத்திரத்தையும் ஏற்க மாட்டோம். என்பதை நமது பிரகடனமாக இருக்க வேண்டும். இதுவே என் ஆசையும் அறிவுரையுமாகும். 

local body election...makkal needhi maiam will not participate

வரும் ஐம்பது வாரங்களில் மக்கள் நலப்பேணி நற்பணிகள் செய்வோம். நாளை பறக்கப்போகும் நம் வெற்றிகொடியே தமிழகத்தின் அன்னக்கொடியுமாகும் என்பதை மக்கள் உணரச்செய்வோம், இதை மக்கள் திண்ணமாக நம்பவும் வைப்போம். 201-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பதே நமது இலட்சியமாக இருப்பின் வெற்றி நிச்சயம்" என குறிப்பிட்டுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios