Asianet News TamilAsianet News Tamil

#BREAKING உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு.. 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது..!

தமிழகத்தில் விழுப்புரம், செங்கல்பட்டு, நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. 

Local body Election Date Announcement
Author
Tamil Nadu, First Published Sep 13, 2021, 5:35 PM IST

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6ம் தேதி மற்றும் 10ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் விழுப்புரம், செங்கல்பட்டு, நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. ஆனால் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

Local body Election Date Announcement

இதையடுத்து, விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டியது.  அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம் போன்ற பணிகள் நடைபெற்றன. கடந்த 31-ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்குப்பதிவு நேரமும் அதிகரிக்கப்பட்டது. தேர்தலை நடத்துவதற்கான வாக்குப்பதிவு அதிகாரிகள் நியமனமும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Local body Election Date Announcement

இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6ம் தேதியும், 2ம் கட்ட வாக்குப்பதிவு 9ம் தேதியும் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களாளர்கள் வாக்களிக்கலாம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ம் தேதி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios